ஆயிரம் ஆண்டுகால கோவில்களின் ரகசியம்... அறிவியல் பார்வை..
ஆயிரம் ஆண்டுகால கோவில்களின் ரகசியம்... அறிவியல் பார்வை..
இந்தியாவில் கோவில்களுக்கு என்று ஒரு அறிவியல் தன்மை உள்ளது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த கோயில்களில் அறிவியல் தன்மையை நாம் அறிந்து கொள்ள தவறி விட்டோம். கோவில்களில் இருக்கக்கூடிய ஒவ்வொறு சிலைகளின் அளவு துவங்கி அதன் கருவறை அமைப்பு மற்றும் கோயில் நோக்கியுள்ள திசை என்று எல்லாவற்றிலுமே அறிவியல் கலந்திருக்கிறது. கோயில் கட்டிடக்கலை என்பது மிக உயர்ந்த அறிவு சார்ந்த கலையாகும்.
கோவில் என்பது பஞ்ச பூதங்கள் கலந்த ஒரு பிரபஞ்சத்தின் உருவாக்கம். கோயில் என்பது அங்கு இருக்கும் மூல தேவதையின் ஆற்றலை சுற்றி அதை கிரகித்து வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரு அமைப்பாகும். இந்த கோவில் கட்டமைப்புக்குள் நாம் செல்லும்போது அந்தக் கோயிலும் அதன் ஆற்றலும் நம்மை புற உலகில் இருந்து விடுவித்து அமைதி நிலையில் லயித்து போக செய்துவிடும். இதை நாம் அறிந்து கொண்டோம் எனில் இந்த அறிவியலால் வரும் நன்மைகள் ஒட்டுமொத்த மனித குலத்தையே மேம்பட செய்து இருக்கும்.
சில கோயில்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக கட்டப்பட்டிருக்கும் நம் உடலில் உள்ள சக்கரங்களை சக்தியூட்டும் விதமாகவும் கோயில்களில் தன்மை அமைந்திருக்கும். இந்த கோயில்கள் என்பது வழிபாட்டு தலமாக மட்டும் இல்லாமல் நம் சக்தி நிலையை உயர்த்துவதற்கு ஏற்றதாகவும் அமைந்திருக்கிறது.
இந்திய கோயிலுக்குள் நாம் நுழையும் போது ஒரு விஷயத்தை கவனிக்க முடியும் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் மூல தேவதையை சென்று அடைவதற்கு முன்னால் வழியில் ஏராளமான விஷயங்களை நம்மால் காண முடியும். அவற்றை கண்டு, கடந்த பின்பு தான் நாம் மூல விக்ரகத்துக்கு அருகில் செல்ல முடியும். இது ஒரு குறிப்பிட்ட அறிவியலை நமக்கு உணர்த்துகிறது.
அது என்ன அறிவியல்? எதற்காக இந்த கட்டுமான புதிர்கள் ? இதுபோன்ற பல கேள்விகள் இன்னும் விடை கண்டுணர படாமலேயே இருக்கிறது ஒரு கோயில் கட்டுவது என்பது ஏதுமற்ற கட்டிடங்களை கட்டுவது போன்ற சாதாரணமான விஷயமல்ல. இதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. கோயில்கள் அமைகின்ற இடம் காந்த அலைகளால் கடுமையாக இருக்கின்ற இடத்தில் தான் அமைய வேண்டும் என்கிற விதி இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற பண்டைய கோயில்கள் அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்கள் இந்த காந்த களம் அடர்த்தியாக உள்ள இடத்திலேயே அமைந்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த விஞ்ஞான கருவியும் இல்லாத காலங்களில் எப்படி இதைக் கண்டு பிடித்தார்கள் என்பது ஆச்சரியமே!! உண்மையில் கோயில் இருக்கும் இடம் என்பதைக் காட்டிலும் கோயிலின் மூல விக்ரகம் அமைந்துள்ள இடமே ஆற்றல்மிக்க காந்தசக்தி களமாக விளங்குகிறது. இந்த விக்ரகத்தை சுற்றியே கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில்களில் உள்ள கர்ப்பக்கிரகம் மூன்று பக்கங்களிலும் அடைக்கப்பட்டிருக்கிறது மூலவரின் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் செம்புத்தகடு காந்த சக்தியை கிரகித்து திறந்திருக்கும் வாயிலின் வெளியே வெளியேறுகிற போது கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் மற்றும் மனம் பல மடங்கு சக்தியூட்டப்படுகிறது என்பது தாத்பரியம்.
இந்திய ஆன்மீகம் என்பது வெறும் நம்பிக்கைகள் சார்ந்தது அல்ல. அவை தெளிவான அறிவியலும், அடர்ந்த ஆழமும் கொண்டவை ஆகும்.