அநாகரீகமான கலாச்சாரத்தை தமிழ் மண்ணில் பரப்புகிறார் சீமான் !
அநாகரீகமான கலாச்சாரத்தை தமிழ் மண்ணில் பரப்புகிறார் சீமான் !

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளரான சாட்டை துரைமுருகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழர்களை தொட்டதால் தூக்கினோம் என்று டிக் டாக் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார், அது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடலூர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சீமானின் தமிழ்நாடு முழுவதும் அநாகரீகமான பிரச்சாரம் மேற்கொள்வது இதற்கு காரணம் எனவும், எல்லோருக்குமே அவரவர் கருத்து உயரமானது தான் அதை வெளிப்படுத்தும் நாகரிகத்தின் கூட ஒரு தமிழன் இழந்து விட்டானே என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது எனவும் சீமான் தமிழகத்தில் அனாகரிகமான கலாச்சாரத்தைப் பரப்பினார், இது போன்று அநாகரிகமாக நடந்து கொள்வோர் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.