வெளிமாநில தொழிலாளர்களை வெளியேற்றுவோர் மீது கடுமையான நடவடிக்கை...மத்திய அரசு எச்சரிக்கை..
வெளிமாநில தொழிலாளர்களை வெளியேற்றுவோர் மீது கடுமையான நடவடிக்கை...மத்திய அரசு எச்சரிக்கை..

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் போது ஆங்காங்கு பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களையும் உள்ளூர் மக்களைப் போலவே பாவிக்க வேண்டும். அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். இதற்காக அரசு பல்வேறு உணவுப் பொருள் வழங்கு நடவடிக்கையை எடுத்து வருகிறது. நிறுவனங்களுக்கும் சில சலுகைகளை வங்கிகள் மூலமாக வழங்க மத்திய ஒப்புக் கொண்டுள்ளது.
என்றபோதிலும் நாட்டில் பல நிறுவன-ங்கள் வெளிமாநில தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றி வருவதாக மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு வெளியேறும் தொழிலாளர்கள் ஆங்காங்கு போக்குவரத்து வசதி இல்லாததாலும், உணவு வசதிகள் இல்லாததாலும் பசி, பட்டினியோடு பாதி வழியில் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
எனவே இடம்பெயர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேறக்கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மேலும் இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவை மீறி நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.