பெண்கள் கிரிக்கெட்: டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியா வீராங்கனை ஷஃபாலி வர்மா முதல் இடம்!
பெண்கள் கிரிக்கெட்: டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியா வீராங்கனை ஷஃபாலி வர்மா முதல் இடம்!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வீராங்கனை 16 வயது கொண்ட ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி வருகிறார்.
அதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்தில் 29 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்தில் 39 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 34 பந்தில் 46 ரன்களும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 34 பந்தில் 47 ரன்களும் அடித்தார்.
தற்போது வெளியிட்ட டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் ஷஃபாலி வர்மா.
19 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை அடைந்தார். ஆஸ்திரேலியா அணியின் சுஜி பேட்ஸ் 2-வது இடத்தில் உள்ளார் . பெத் மூனே 3-வது இடத்திலும், ஷோபி டெவைன் 4-வது இடத்திலும், மெக் லானிங் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியா வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரண்டு இடங்கள் சரிந்து 6-வது இடத்தில் உள்ளார்.