சாக்கடை நீரில் தர்பூசணியை கழுவிய ஷாபாஸ், ரியான் - அலேக்காக தூக்கிய காவல்துறை!
சாக்கடை நீரில் தர்பூசணியை கழுவிய ஷாபாஸ், ரியான் - அலேக்காக தூக்கிய காவல்துறை!

கர்நாடகாவின் பெல்காவியின் நிப்பானி பகுதியில் தர்பூசணிகளை கழிவுநீரில் கழுவிய வீடியோ வைரலானதை அடுத்து ஷாபாஸ் மற்றும் ரியான் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மார்ச் 28 அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து ஏப்ரல் 19 அன்று பெல்காவி போலீசார் இளைஞர்களை கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் நோய்க்கிருமியிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுகாதாரம் குறித்து அரசாங்கம் வலியுறுத்தி வரும் நேரத்தில் இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த இளைஞர்கள் அசுத்தமான பழத்தை விற்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து போலீசார் எச்சரிக்கப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் வீடியோவைப் பார்த்த பின்னர் இளைஞர்களை அடையாளம் காட்டிய உள்ளூர்வாசிகள் நிப்பானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கர்நாடகாவின் பெல்காவியில் உள்ள ஹிண்டல்கா சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.