Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்களுக்கு பாரபட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்!

இந்துக்களுக்கு பாரபட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்!

இந்துக்களுக்கு பாரபட்சம் காட்டும் டெல்லி அரசு - குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்துக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 2:28 AM GMT

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக மாறிய போது பல இந்துக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவர்களது கடைகளும் வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இது சில நடந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வன்முறை நிகழ்ந்த பகுதியில் வாழும் இந்துக்களின் மனதில் இது ஒரு வடுவாக பதிந்து விட்டது அச்சத்தில் வசித்து வரும் இந்துக்கள் தற்போது தங்களது வீடுகளையும் கடைகளையும் விற்றுவிட்டு வேறு பகுதிகளுக்கு குடிபெயர முயற்சித்து வரும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

Opindia ஆன்லைன் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. மாஜ்பூர் பகுதியில் உள்ள மோகன்புரியில் வசித்து வரும் இந்துக்கள் தங்கள் உடைமைகளை காக்க தங்கள் செலவிலேயே தடுப்புகள் அமைத்து ஒரு இரவு நேர காவலாளியையும் பணியமர்த்தி உள்ளனர். ஐந்து மாதங்களுக்கு முன்பு சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்ட பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளின் முன்பு 'இந்த வீடு/கடை விற்பனைக்கு' என்று தட்டி வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் தாங்கள் வழிபடவும் வழிபாட்டு பாடல்களை போடவும் ஏன் ஹனுமான் சாலிசா கூட படிக்க கூடாது என்று அச்சுறுத்துவதாக இந்துக்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்களது மசூதியிலிருந்து முழு சுதந்திரத்துடன் ஆசான் ஒலிக்கப் படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். வன்முறைக்குப் பிறகு இந்து பெண்கள் வீட்டிலிருந்து வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பைக்கில் வேகமாக செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் இந்து குடும்ப பெண்களை பார்த்து ஆபாசமாக பேசுவதும் தவறான முறையில் நடந்து கொள்வதும் என சகிக்க இயலாத செயல்களில் ஈடுபடுவதாகவும் எத்தனை நாட்களுக்கு தான் இவர்களுடன் மோதிக் கொண்டே இருப்பது என்று சலித்துப் போய் வேறு வழியில்லாமல் அமைதி காப்பதாகவும் இந்துக்கள் கூறுகின்றனர். மேலும் வன்முறைக்குப் பிறகு பலர் வேலையிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பக்ரீத் பண்டிகையின் போது வேண்டுமென்றே இந்துக்களின் வீட்டின் முன்னால் விலங்குகளை பலியிட்டு முஸ்லிம்கள் பொய் வழக்கு போட்டு வாழ்க்கையை நாசம் செய்து விடுவோம் என்று வேறு மிரட்டுவதாக இந்துக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏ கவுன்சிலர் என்று யாராவது இந்துக்களை சந்தித்து ஆறுதல் கூற வந்தார்களா என்று கேட்டபோது ஆம் ஆத்மி எம்எல்ஏ கோபால் வந்ததாகவும் ஆனால் அவர் முஸ்லிம்களை மட்டுமே சந்தித்து அவர்களுக்கு மட்டுமே நிவாரணப் பொருட்களையும் வழங்கியதாகவும் கூறியுள்ளனர்.

குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாமல் சாஹில் என்பவரது தந்தையைக் கொலை செய்ததாக கொலை நடந்த இடத்திற்கு 500 மீட்டர் சுற்றளவில் செல்போன் சிக்னல் இருந்ததை அடிப்படையாக வைத்து 16 இந்துக்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு ஜாமீன் கூட வழங்கப்படவில்லை என்றும் இதை முன்னுதாரணமாக கொண்டு முஸ்லிம்கள் தங்களை பொய் வழக்கு போடுவோம் என்று அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளனர். இந்த 16 பேரில் பெரும்பாலானோர் விஎச்பி ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பதும் அவர்களது குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை இந்த 16 பேருடன் தொடர்பு கொள்ளக் கூட காவல்துறையினர் அனுமதிப்பதில்லை என்று அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மதுபன் காலனி, சுபாஷ் மொஹல்லா போன்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் இதே நிலைதான். வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் பலரும் இந்தப் பகுதியை விட்டு அகன்று வேறு இடங்களுக்கு குடி பெயர விரும்புவதை பார்க்க முடிகிறது. டெல்லி வடகிழக்கு பகுதியின் எம்பியும் முன்னாள் டெல்லி பாஜக தலைவருமான மனோஜ் திவாரி இந்துக்களின் இந்த நிலை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு இந்துக்களுக்கு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். எந்த உள்ளூர் அரசியல்வாதியோ எம்எல்ஏவோ தங்களை சந்திக்கவோ நிவாரணப் பொருட்கள் வழங்கவோ வரவில்லை என்று இந்துக்கள் கூறியதை மனோஜ் திவாரியும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லி கலவரத்தில் இரு மதங்களைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நடந்து கொள்வது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


நன்றி : Opindia

Next Story