வெண்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு.. பிரிட்டன் அரசு திணறல்?
வெண்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு.. பிரிட்டன் அரசு திணறல்?
பிரிட்டனில் நாட்டில் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் சமமாக வெண்டிலேட்டர் கொடுக்க முடியாமல் பிரிட்டன் அரசு தவித்து வருகிறது.
இதற்கு முன்பே ஆயிரத்துக்கு அதிகமானோர் பிரிட்டன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 19,000 மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதில் பிரதமர் போரிஸ் ஜான்ஸனும் உள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு உயிர் காக்கும் கருவியான வெண்டிலேட்டர் அதிகமான நேரம் பயன்படுகிறது.
பிரிட்டன் நாட்டின் அரசு மருத்துவமனை என்.ஹெச்.எஸ்-ல் போதுமான அளவிற்கு வெண்டிலேட்டர்கள் உள்ளன. ஒருவருக்கு கொரோனா வைரஸ் முற்றிய பிறகு அவருடைய உயிரை தக்க வைக்க ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வெண்டிலேட்டரில் வைப்பது சரியான தீர்வு இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் மருத்துவமனையில் அவசரமான நேரத்தில் வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. ஆகவே மற்ற நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் கிடைக்க தாமதமாகும். எனவே உயிர் பிழைக்க வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு முதலில் உயிர் காக்கும் கருவியான வெண்டிலேட்டரை பொறுத்த மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள் என கூறப்படுகிறது.