Begin typing your search above and press return to search.
ஊரடங்கு உத்தரவை மீறினால் சுட்டுக் கொலை! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு..
ஊரடங்கு உத்தரவை மீறினால் சுட்டுக் கொலை! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு..

By :
அமேரிக்கா, இந்தியா உட்பட என்பது சதவீத உலக நாடுகளில் மக்கள் ஊரடங்கில் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து உலகம் முழுவதும் ஒரு மாபெரும் போர் நடந்து வருகிறது. என்றாலும் பொது மக்களில் சிலர் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர். இவர்களால் சமூக சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் உண்டாகிறது.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 2,633 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story