காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு - தீ பற்றி எரியும் தமிழக கோவில்கள் : இன்று அதிகாலையில் அரங்கேறிய சம்பவம்!
காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு - தீ பற்றி எரியும் தமிழக கோவில்கள் : இன்று அதிகாலையில் அரங்கேறிய சம்பவம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வீரவசந்த மண்டபத்தில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலுக்குள் இருக்கும் கடைகளை அகற்ற உத்தரவிட்டது.
அதையடுத்து தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. அந்த வகையில் ஸ்ரீரங்கம் கோயிலில் அம்மா மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். அதன்பிறகு நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்கிறார்கள் பக்தர்கள். இந்த நிலையில் மீண்டும் ஸ்ரீரங்கத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கருட மண்டபத்திற்கும் ஆரியபட்டால் வாசலுக்கும் இடையே உள்ள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று பிரசாத ஸ்டால் அமைத்துள்ளது.
கோயில் நிர்வாகம் விட்ட டெண்டர் எடுத்த முரளி என்பவர் அந்த பிரசாத ஸ்டாலை நடத்தி வருகிறார். அங்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக புளிசாதம், பொங்கல், தயிர், சாதம், வடை, லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்ன.
இந்நிலையில் அந்த பிரசாத ஸ்டாலில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்துப் பதறிய கோயில் காவலர்கள், பணியாளர்கள் மற்றும் பிரசாத ஸ்டால் ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இதே போல தமிழகத்தில் பல கோவில்களில் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படாமல், தொடர்ச்சியாக தீ விபத்து அரங்கேறி வருகிறது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.