Kathir News
Begin typing your search above and press return to search.

காபி டே ஓனர் சித்தார்த்தா தற்கொலைக்கு காங்கிரசின் ஊழல் காரணமா !! திடுக்கிடும் தகவல்கள்!

காபி டே ஓனர் சித்தார்த்தா தற்கொலைக்கு காங்கிரசின் ஊழல் காரணமா !! திடுக்கிடும் தகவல்கள்!

காபி டே ஓனர் சித்தார்த்தா தற்கொலைக்கு  காங்கிரசின் ஊழல் காரணமா  !!  திடுக்கிடும் தகவல்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2019 6:22 AM GMT


கர்நாடகாவில், மத சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.க, ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த நிலையில், 'கபே காபி டே' நிறுவனத்தின் தலைவரும், காங்., முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார்.


வருமான வரித்துறையின் நெருக்கடியால்தான், இந்த தற்கொலை நடந்தது என, காங்கிரசார் மோடி அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல என்கின்றனர், நிதி அமைச்சக மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள். சமீபத்தில் சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் அரசியலில் சம்பாதித்த கோடானு கோடி பணம் குறித்து வந்த தகவலின் பேரில் அவர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அடுக்கடுக்கான சோதனைகள் நடத்தினர். ஆனால் எதிர்பார்த்த அளவில் பணம் சிக்கவில்லை.


ஆனால் கணக்கில் காட்டமுடியாத அந்த பணத்தின் பெரும்பகுதி முழுவதையும் பதுக்க முடியாமல் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பலர் நம்பிக்கையுடன் தொழிலதிபர் சித்தார்த்தாவிடம் கொடுத்து வைத்திருந்தார்களாம். இந்தப் பணத்தை வைத்து, சித்தார்த்தா பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கிவிட்டாராம். இன்னொரு பக்கம், கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது, எம்.எல்.ஏ., சீட் தர, கட்சிக்காரர்களிடமிருந்து பல கோடி பணம் வாங்கப்பட்டதாம். இந்தப் பணமும், சித்தார்த்தாவிடம் தான் கொடுக்கப்பட்டதாம்.சித்தார்த்தாவிடம், கணக்கில் காட்டாத பணம் நிறைய இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது என, சித்தார்த்தாவால் பதில் சொல்ல முடியவில்லை.


ஆனால் இந்த பணத்திற்கு கூடுதல் வரி கட்ட, தன் கம்பெனி பங்குகளை விற்கவும் முடியாத நிலைஅவருக்கு ஏற்பட்டு விட்டதாம். ஒரு பக்கம் காங்கிரஸ் தலைவர்களின் டார்ச்சர், இன்னொரு பக்கம் வருமானவரி வரித்துறையின் கேள்விகள். இதில் இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போல ஆன இவர் வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்களின் போக்கு, நடத்தைகள் பிடிக்காத இவருடைய மாமனார் கிருஷ்ணா கடைசி காலத்தில் காங்கிரசிலிருந்து வெளி வந்து பா.ஜ.க வில் இணைந்தார்.


காங்கிரசாரின் பிடியில் சிக்கியுள்ள தனது மருமகனை காப்பாற்றும்படி அவர் பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் சிலரை சந்தித்து முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மிகப்பெரிய ஊழல் சரித்திரம் இதன் பின்னணியில் உள்ளதால் அவர்கள் யாரும் இந்த விவகாரத்தில் எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் ஆட்சியும் மாறிவிட்டது.


இந்த நிலையில் அரசியல்வாதிகள் கொடுத்த பணத்தில் தனக்கு தெரியாத தொழில்கள் தொடங்கி நஷ்டம் அடைந்ததும், அதை அவர்கள் கேட்கும் போது திருப்பித்தரமுடியாமல் போனதும், தான் தொழில்களில் முதலிட்ட பணம் ஊழல்காரர்களின் பணம் என்பது வருமான வரித்துறையினருக்கு தெரிந்து போனதும்தான் இவரின் தற்கொலைக்கு காரணம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக செய்திகள்கூறுகின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News