Kathir News
Begin typing your search above and press return to search.

சித்தார்த்தா செய்து கொண்டது தற்கொலையே !! பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது!!

சித்தார்த்தா செய்து கொண்டது தற்கொலையே !! பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது!!

சித்தார்த்தா செய்து கொண்டது தற்கொலையே !! பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2019 1:07 PM GMT



கேபே காஃபி டே நிறுவன உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகி, அவரது மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கேபே காஃபி டே நிறுவனருமான தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா, மங்களுருவில் கடந்த திங்கட்கிழமை காணாமல் போனார்.


இதையடுத்து நீண்ட தேடுதல் பணிகளுக்கு பின்னர், நேத்ராவதி ஆற்றிலிருந்து சித்தார்த்தாவின் உடல் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.


சித்தார்த்தா தற்கொலை செய்து கொள்ளப்போவது போல் கடிதம் எழுதி வைத்திருந்தாலும், அவரது மரணம் குறித்து சில சந்தேகங்கள் எழுந்தன.


இந்நிலையில் சித்தார்த்தாவின் உடலை உடற்கூராய்வு செய்த மங்களூருவிலுள்ள வென்லாக் மாவட்ட மருத்துவமனை, உடற்கூராய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதில் சித்தார்த்தாவின் நுரையீரலில் இருந்த தண்ணீர், நீரில் மூழ்கியதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்தார்த்தாவின் தற்கொலையில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை என்பது தெளிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story