Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மீக சாதனாவிலும், அறிவியல் பார்வையிலும் சூர்ய நமஸ்காரம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

ஆன்மீக சாதனாவிலும், அறிவியல் பார்வையிலும் சூர்ய நமஸ்காரம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

ஆன்மீக சாதனாவிலும், அறிவியல் பார்வையிலும் சூர்ய நமஸ்காரம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 2:17 AM GMT

இன்றைய கால மக்களுக்கு ஒரு விஷயத்தை செய்யும் முன்பு இதனால் என்ன பயன் என்று தெரிந்து கொள்வதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. உடற்பயிற்சியை பற்றி பேசுகிற போது யோகத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது சூர்யநமஸ்காரம். நம் உடலில் ஏராளமான நச்சுப்பொருட்கள் உண்டு. சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் செயல்பாடு சீராகும். இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு கூடுகிற போது இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் உடலின் நச்சுக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரு மனிதர் தன் அன்றாட வேலைகளில் உடலின் தசைகளில் 35 – 45% தசைகளை மட்டுமே பயன்படுத்துகிறார். மீதம் இருக்கும் தசைகளை பயன்படுத்துவதில்லை. ஆனால் சூரியநமஸ்காரம் செய்வதன் மூலம் 90% தசைகள் துடிப்பாக இயங்குகிறது.

மற்றும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் மனமும் உடலும் அமைதியடைகிறது. ஒருநிலைப்படுகிறது. மற்றும் சூரிய நமஸ்காரத்தை பயிற்சி செய்வதால் என்டோக்ரைன் சுரப்பி, தைராய்ட், பிட்டியூட்ரி, பாராதைராய்டு, ஆகிய சுரப்பிகளின் இயக்கம் சிறப்பாக அமையும். மேலும் இதனை தொடர்ந்து பயிற்சி செய்வதால் மலச்சிக்கல் நீங்கி, ஜீரண மண்டலம் சரியாக இயங்கும்.

குறிப்பாக சரும பிரச்சனைகள் நீங்கி, தோலுக்கு புத்துணர்வை தருகிறது. மிக குறிப்பாக பெண்களுக்கு, ஏதேனும் மாதவிடாய் பிரச்சனை மற்ற சுரபிகள் பிரச்சனை இருப்பின் இது சிறப்பாக அமையும். உடலில் ஏதேனும் துருநாற்றம் பிரச்சனை ஏற்பட்டால், இளநரை போன்ற பிரச்சனைகள் இருப்பினும் தொடர் சூரிய நமஸ்கார பயிற்சி உதவும்.

முதுகுதண்டு நேராவதால், உடலில் வளைவுத்தன்மை நெகிழ்வுத்தன்மை கூடி இது உடலுக்கு தேவையான ஆரோக்கியம், பலம், ஆகியவற்றை வழங்குகிறது.

சூரிய நமஸ்காரத்தை யாரெல்லாம் செய்யக்கூடாது:

9 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள்.

ஏதேனும் உடல் உபாதைகள் மற்றும் மாதவிடாய் காலங்களில் இதனை தவிர்த்தல் நலம்

மேலும் இணையத்தில் இதற்கான குறிப்புகள் ஏராளம் கிடைக்கப்பெற்றாலும், முறையான ஆசிரியரிடம் சென்று பயிற்சி மேற்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வது கூடுதல் சிறப்பை வழங்கும் . சூரிய நமஸ்காரம் ஆன்மீகம், அறிவியல், யோகம் என ஆனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஓர் அற்புத மார்கம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News