Kathir News
Begin typing your search above and press return to search.

எடை கூடிய சிம்பு, அதிர்ச்சியில் தயாரிப்பாளர்.!

எடை கூடிய சிம்பு, அதிர்ச்சியில் தயாரிப்பாளர்.!

எடை கூடிய சிம்பு, அதிர்ச்சியில் தயாரிப்பாளர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 7:09 AM GMT

சிம்பு அறிமுகமாகிய காலகட்டத்தில் அவருக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட தனுஷ் இன்று உச்சத்தில் இருக்கிறார். ஆனால் சிம்புவோ தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய படியே உள்ளார்.

பல்வேறு தவறான பழக்கங்களால் எடை கூடி, படப்பிடிப்புக்கே வராமல் இருந்த சிம்பு, தன்னிலை உணர்ந்து மீண்டும் உடல்நிலையில் கவனம் செலுத்தி, கொஞ்சம் உடலைக் குறைத்து 'மாநாடு' படத்திற்காகத் தயாரானார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் சில நாட்கள் 'மாநாடு' படப்பிடிப்பும் நடைபெற்றது. முன்பு போல் அல்லாமல் நேரம் தவறாமல் சிம்பு இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதையடுத்து மீண்டும் தயாரிப்பாளர்கள் அவரை நோக்கிப் படையெடுக்கத் துவங்கினர்.

ஆனால் எதிர்பாராத விதமாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து 'மாநாடு' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் இருக்கும் சிம்பு மீண்டும் உடல் எடை கூடிவிட்டாராம். இது அவரது தயாரிப்பாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News