"ஓசூரில் 905 ஏக்கரில் சிப்காட் ரெடி" - அமைச்சர் சம்பத் தகவல்!
"ஓசூரில் 905 ஏக்கரில் சிப்காட் ரெடி" - அமைச்சர் சம்பத் தகவல்!

இன்று சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் ஓசூரில் தற்போது இரண்டு சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள நிலையில் தற்போது 905 ஏக்கரில் சிப்காட் - 3 தயாராகி விட்டதாகவும், வெகு விரைவில் சிப்காட் - 3 வரும் என்று தெரிவித்தார்.
ஓசூரில் ரூ.635 கோடியில் 4300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய திட்டம் தயார்!
— MC Sampath (@MCSampathOffl) March 13, 2020
சூளகிரி வட்டத்தில் 905 ஏக்கரில் புதிதாக #SIPCOT Phase 3!!
ஓசூரை தொழில்வளர்ச்சி பெற்ற நகரமாக மாற்ற முழு முயற்சி!!! #TNAssembly pic.twitter.com/ePnFXTiiy7
சூளகிரி வட்டத்தில் 905 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிப்காட் - 3 வெகு விரைவில் வரும் எனவும் தெரிவித்தார். தமிழக அரசைப் பொறுத்தவரை ஓசூரை இரண்டாவது இடமாக சென்னைக்கு அடுத்ததாக தொழில் வளர்ச்சியில் பார்ப்பதாகவும், ஓசூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகில் உள்ளதாலும் அங்கே கால நிலை பிடித்து இருப்பதாலும் அங்கு முதலீட்டாளர்கள் விரும்பி வருவதாகவும், ஓசூரை தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக மாற்றுவோம் எனவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.