Top
undefined
Begin typing your search above and press return to search.

இலங்கையில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்! பதறவைக்கும் சம்பவம் !

இலங்கையில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்! பதறவைக்கும் சம்பவம் !

Kathir EditorBy : Kathir Editor

  |  14 Feb 2020 4:21 AM GMT

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக மிக முக்கிய பங்காளியாக இருந்தது. இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு வழங்கியது.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். போர் உச்சகட்டத்தில் இருந்தபோது சென்னையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அரங்கேற்றினார். பின்னர் இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அப்பட்டமான பொய்யை கருணாநிதி சொன்னார். இதனை உண்மை என்று நம்பிய அப்பாவி இலங்கை தமிழர்கள், மறைவிடங்களில் இருந்து வெளியே வந்தார்கள். அவர்களை சிங்கள ராணுவம் கொத்துக்கொத்தாக கொன்று புதைத்தது.

இப்போது இலங்கையில் தமிழர்கள் பகுதியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வெளியே வருகின்றன. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் உள்ள மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக தோண்டினார்கள். அப்போது ஏராளமான எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளுடன் பெண்கள், குழந்தைகளின் ஆடைகளும் இருந்துள்ளன.


இதனால் அந்தப் பகுதி, போலீசார் மற்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் எவ்வளவு எலும்பு கூடுகள் உள்ளன என்பதை தோண்டி ஆய்வு செய்து வருகின்றனர்.


இதற்கிடையே இலங்கை அரசு, இந்த எலும்புக்கூடுகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே புதைக்கப் பட்டன என்பது போன்ற திசை திருப்பும் வேலையில் இறங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Story