Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க இந்து விரோதி கட்சி - அலறியடித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் எடுபடாமல் போன தந்திரம்!

தி.மு.க இந்து விரோதி கட்சி - அலறியடித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் எடுபடாமல் போன தந்திரம்!

தி.மு.க இந்து விரோதி கட்சி - அலறியடித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் எடுபடாமல் போன தந்திரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 July 2020 9:58 AM GMT

கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு தி.மு.க ஆதரவு அளிப்பதாக டுவிட்டரில் போலி தகவல் பதிவிடப்பட்டது என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டி இருந்த நிலையில், திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அலறியடித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி. இந்து விரோதிகள் என கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனை. பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

திமுக இந்து விரோதி என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த கால அனுபவங்கள், பேட்டிகள் இந்து விரோதமாகவே இருந்துள்ளது. இதை ஒற்றை அறிக்கையில் மாற்றி விட முடியாது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருமுறை சிறுபான்மையினர் மாநாட்டில் இந்து என்றால் சமஸ்கிருதத்தில் திருடன் என்று பொருள் என கலைஞர் கூறினார். அப்படிப்பட்ட அரசியல் பின்னணி கொண்டவர்கள் திமுகவினர்.

தற்போது இந்து கடவுள்களையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவாக பேசிய கறுப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பு இருப்பது வெளிப்படையாக மக்களுக்கு தெரிந்துவிட்டால், பெருபாண்மையான வாக்கு வங்கி பறிபோய்விடும் என்ற பயத்தில் ஸ்டாலின் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. இதற்கு பின்னணியில் டியூசன் மாஸ்டர் பிரசாந்த் கிஷோர் தூண்டுதல் இருப்பதும் தெரிய வருகிறது.

Next Story