Kathir News
Begin typing your search above and press return to search.

பாத்ரூமில் வழுக்கி விழுந்த ரவுடிகள்! பாசத்தால் மாவு கட்டு போட்ட காவல்துறை!

பாத்ரூமில் வழுக்கி விழுந்த ரவுடிகள்! பாசத்தால் மாவு கட்டு போட்ட காவல்துறை!

பாத்ரூமில் வழுக்கி விழுந்த ரவுடிகள்! பாசத்தால் மாவு கட்டு போட்ட காவல்துறை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Sep 2019 4:30 AM GMT


தமிழகத்தில் ரவுடிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழகத்தில் திருட்டு கொலை அடாவடி சம்பவங்களில் தமிக காவல்துறையால் கைது செய்து வருகின்றனர்.


காவல்நிலையத்தில் விசாரிக்கும் சமயத்தில் குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை கால் முறிவு ஏற்படுகின்றது. அதன் புகைப்படங்கள் காவல்துறையால் வெளியிடப்படும். இந்த வழுக்கி விழும் நிகழ்வு சமீபத்தில் அதிகமாக நடைபெறுகிறது.


இந்நிலையில் புதுவையை சேர்ந்த ரவுடிகள் நால்வர் கடலூர் நெல்லிக்குப்பத்தில் ஒளிந்திருப்பதாக தகவல் வந்தததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் ரடிகளைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


அவர்களை விசாரித்தபோது புதுவையை சேர்ந்த ரவுடி முகிலனை கொலை செய்ய திட்டம் திட்டியது தெரியவந்தது. அவர்கள் தங்கியிருந்த இடத்தை சோதனை செய்தபோது , அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் கையும், காலும் உடைந்த நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story