Kathir News
Begin typing your search above and press return to search.

46 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் வெளியேற்றப்பட்டேன் - எஸ்.எம்.கிருஷ்ணா கொதிப்பு!

46 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் வெளியேற்றப்பட்டேன் - எஸ்.எம்.கிருஷ்ணா கொதிப்பு!

46 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் வெளியேற்றப்பட்டேன் - எஸ்.எம்.கிருஷ்ணா கொதிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Feb 2019 9:46 AM GMT


46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பலம் வாய்ந்த வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். ஆனால் ஆட்சி காலம் முடியும் முன்பே அவருக்கு வழங்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவியை காங்கிரஸ் பறித்தது. அதற்கு அக்கட்சி மேலிடம் எந்த காரணத்தையும் கூறவில்லை.


இதனால் டெல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரு திரும்பினார். கர்நாடகத்திற்கு வந்த பிறகு அவர் வீட்டில் ஓய்வு எடுத்தார். கர்நாடக காங்கிரசில் தனக்கு ஏதாவது நல்ல பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவரை காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் காங்கிரஸ் மீது எஸ்.எம்.கிருஷ்ணா கடும் அதிருப்தியில் இருந்தார்.இந்த நிலையில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை அவர் கடந்த 2017-ம் ஆண்டு பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். காங்கிரசில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கு உரிய மதிப்பு இல்லை என்று கூறி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தார். காங்கிரசின் குடும்ப அரசியலையும் அவர் குறை கூறினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை விமர்சிக்கவில்லை.


இந்த நிலையில் சுமார் 85 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த (2017) மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். இந்தநிலையில், மடூர் கிருஷ்ணா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எஸ்எம். கிருஷ்ணா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் அரசில் இருந்து வெளியேறியதற்கும் ராகுல் காந்தியின் தலையீடுதான் முக்கியக் காரணம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை.


ஆனாலும், கட்சியிலும், ஆட்சியிலும் ஏராளமான விஷயங்களில் தலையிட்டார்.நான் கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் வகித்த பல்வேறு பதவிகளிலும் எனது பணியை ராகுல் காந்தி உத்தரவின் பெயரில் திறமையாகவே செய்தேன். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்று ரகசியமாக ராகுல் காந்தி உத்தரவிட்டதால், நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.ஆனால், தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News