கொரோனா விழிப்புணர்வு.. இண்டூர் கால்நடை மருத்துவமனையில் சமூக இடைவெளி..
கொரோனா விழிப்புணர்வு.. இண்டூர் கால்நடை மருத்துவமனையில் சமூக இடைவெளி..

தர்மபுரி அருகே உள்ள இண்டூர் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிரட்டி வருகிறது.
இதனை முற்றிலும் ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து மக்கள் தாங்களாகவே சுயகட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும். வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றை தவிர்க்கும் விதமாக இண்டூர் கால்நடை மருத்துவமனையில் உரிமையாளர்களுக்கு சமூக இடைவெளியை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்று கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராஜேந்திரன், மற்றும் உதவி இயக்குனர் டாக்டர் மணிமாறன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்வின்போது கால்நடை மருத்துவர் டாக்டர் தசரதன், உதவியாளர் முனிராஜ் ஆகியோர் உடனடிருந்தனர்.