“இந்த பாத்திமாவை விடுங்க தளபதி... அந்த பாத்திமா?” – பிண அரசியல் செய்யும் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்!
“இந்த பாத்திமாவை விடுங்க தளபதி... அந்த பாத்திமா?” – பிண அரசியல் செய்யும் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்!
By : Kathir Webdesk
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மதிப்பெண் குறைவாக பெற்றதற்காக தற்கொலை செய்து கொண்டார்.
பிண அரசியல் நடத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வழக்கம்போல பாத்திமாவின் தற்கொலையையும் அரசியலாக்கி ஆதாயம் பெற முயற்சி செய்து வருகிறார். இதன் உச்ச கட்டமாக பாத்திமா முஸ்லிம் என்பதாலும், பேராசியர் இந்து என்பதாலும் மதரீதியான கீழ்த்தரமான அரசியலை ஸ்டாலின் கையாண்டு வருகிறார்.
மதிப்பெண் குறைவாக இருப்பதன் காரணமாக மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாக தெரிந்த பின்னரும், அவரது சாவில் மர்மம் உள்ளது என்று மீண்டும் மீண்டும் ஸ்டாலின் கூறி வருகிறார்.
இதுதொடர்பான பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் நேற்று வெளியார்.
அந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே, நெட்டிசன்கள், ஸ்டாலினை வறுத்து எடுக்க தொடங்கிவிட்டனர். கருத்து பதிவிட்ட 99 சதவீதம் பேரும், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
பல நெட்டிசன்கள், எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 மாணவ - மாணவிகள் மர்மமான முறையில் இறந்தார்களே, அப்போது நீங்கள் எங்கு சென்றீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
“சாதிக் பாஷாவை கொலை பண்ணுனது எந்த ஆதிக்க சக்தியோ? பாத்திமா பாபுவை துரத்தி துரத்தி சூரை ஆடுனது எந்த ஆதிக்க சக்தியோ? தினகரன் பத்திரிகை ஊழியர்களை தீ வைத்து கொளுத்தியது எந்த ஆதிக்க சக்தியோ? வாக்கிங் போன தா.கிருஷ்ணன் கொலை பண்ணது எந்த ஆதிக்க சக்தியோ” என்று சிவா என்பவர், சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.
“இந்த பாத்திமாவை விடுங்க தளபதி... அந்த பாத்திமா?” என்று துரைகோபால் என்பவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இவர் முரசொலி மூல பத்திரம் பிரச்சனையை திசை திருப்ப எத்தனை பிண அரசியலை நடத்தினாலும் மக்கள் மீண்டும் மீண்டும் அந்த மூலப்பத்திரம் எங்கே என்று தான் கேட்கிறார்கள் அது இப்போதும் டுவிட்டரில் பிரதி பலித்து வருகிறது.