நாம் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் "மே" மாதத்தின் மகத்தான தினங்கள் என்னென்ன தெரியுமா?
நாம் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் "மே" மாதத்தின் மகத்தான தினங்கள் என்னென்ன தெரியுமா?

மே மாதத்தில் நிறைந்திருக்கும் மேன்மையான தினங்கள் சில....
மே மாதத்தில் 31 நாட்கள் இருக்கிறது என்பது அனைவரும் அடிப்படையில் அறிந்ததே. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் எத்தனையோ சிறப்பு தினங்கள் வாழ்க்கையே கொண்டாட்டத்திற்கானது என்ற தத்துவத்தை உயிர்ப்பிக்கும் வகையில் நாளொரு திருவிழா, நாடெங்கும் பெருவிழா என ஒவ்வொறு நாளுக்கும் ஒவ்வொறு பெயர் சூட்டி அது குறித்து தகவல்கள், புகைப்படங்கள், மீம்கள், ஏராளமான தரவுகள் என நம் அறிவையும் அலைபேசியையும் நிறைக்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு.
எனவே எதிர்வரும் மே மாதத்தில் நம் சிந்தனையை, உள்ளத்தை, உள்பெட்டியை நிறைக்கயிருக்கிற தின ங்கள் இவை
உழைப்பை உலகிற்க்கு உரக்க சொல்ல
சர்வதேச உழைப்பாளர் தினம்
மே 1
சிரிப்பலைகளால் மனங்கள் சிறகு விரிக்க
சர்வதேச சிரிப்பு தினம்
மே ( முதல் ஞாயிறு)
மூச்சுக்காற்றின் முக்கியத்துவம் உணர்த்த
உலக ஆஸ்துமா தினம்
மே( முதல் செவ்வாய்)
அன்னையரின் அன்பை அகிலம் உணர
அன்னையர் தினம்
மே ( இரண்டாம் ஞாயிறு)
தடகளத்தின் தனித்தன்மை போற்ற/
உலக தடகள தினம்
மே 7
செவிலியர்களின் உன்னத பணியை செவ்வனே போற்ற
சர்வதேச செவிலியர் தினம
மே 12
குதூகலமூட்டும் குடும்ப உறவுகளின் உன்னதம் உரைக்க
சர்வதேச குடும்ப தினம்
மே 15
தொலைதொடர்பின் வீச்சை உணர்த்த
உலக தொலைதொடர்பு தினம்
மே 17
புகையிலையின் பாதிப்பை எடுத்து சொல்ல
புகையிலை எதிர்ப்பு தினம்
மே 31
இவ்வாறாக ஒவ்வொறு மாதமும் மகத்துவம் பொருந்தியதாகவே இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஏராளமான தனிப்பட்ட தினங்கள் இருக்கின்றன. பிறந்தநாள், திருமண நாள் போன்று. ஆனால் பொதுவரங்கில் கொண்டாப்படும் இது போன்ற தினங்கள் மூலமும், ஒரு கருத்தினை முன்வைத்து தினங்கள் கொண்டாடப்படும் போது அது குறித்த விழிப்புணர்வு கடைநிலை மக்கள் வரை ஏற்படுகிறது. எனவே இது போன்ற தினங்களை வெறும் விடுமுறை வெறும் வாழ்த்து என கடந்து விடாமல், அதன் பின்புலம் என்ன? அதன் வரலாறு என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்