Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்கள் வளையல் அணிவதன் ஆன்மீக மற்றும் அறிவியல் காரணம் என்ன?

பெண்கள் வளையல் அணிவதன் ஆன்மீக மற்றும் அறிவியல் காரணம் என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 April 2020 3:35 AM GMT

இந்திய பெண்கள் அணிகிற முக்கியமான அணிகலன்களுள் ஒன்று வளையல். இதற்கு ஏராளமான வரலாற்று பின்புலம் இருக்கிறது. இவை கண்ணாடி துவங்கி வைரம் வரையிலும் அதற்கு மேலும் என பல்வேறு பொருட்களை கொண்டும் வளையல்கள் உருவாக்கப்படுகின்றன.

பஞ்சாபின் பாரம்பரியமிக்க வளையல் யானையின் தந்தத்தினாலும், பெங்காலின் பாரம்பரியமிக்க வளையல் சங்கினாலும் செய்யப்படுகிறது. மேலும் உத்திர பிரதேசத்தின் மணபெண்களில் பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற வளையல்களை அவர்களின் திருமணத்தின் போது அணிவது வழக்கம். மேலும் மஹாராஸ்ட்ரா மற்றும் கர்நாடகாவில் பெரும்பாலும் பச்சை நிற வளையலையும் பச்சை நிற புடவையையும் திருமணத்தின் போது அணிவது வழக்கம். எனவே வளையல் என்பது நம் கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும் ஒன்று.

மேலும் வளையலை நம் இந்திய கலாச்சாரத்தில் மங்களகரமான பொருளாக கருதுகிறார்கள். தங்கம், வைரம், வெள்ளி, முத்து, என பலதரப்பட்ட பொருட்களால் வளையல்கள் உருவாக்கப்பட்டு அலங்கரிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக வளையல்கள் உருவாக்கும் ஓசை என்பது எதிர்மறை அதிர்வுகளை தூர அகற்றும் என்பது நம்பிக்கை. அதிலும் மிக குறிப்பாக பெண்கள் கண்ணாடி வளையல் அணிகிற போது ஏற்படும் சத்தத்திற்கு பலன்கள் அதிகம் என்பது நம்பிக்கை.

இன்றைய துரித உலகில் கண்ணாடி வளையலில் உள்ள பராமரிப்பு இடையூறுக்கு அஞ்சி பெண்கள் ப்ளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களில் வளையல் அணிய துவங்கி விட்டனர். இதனால் வளையல்களின் உண்மையான பலன் என்பது இல்லாமல் போய் விட்டது.

மேலும் வளையோசையினால் பெண்களின் உடல் இயக்கம் சீராகிறது. வளையலின் ஓசை என்பது ஒரு வகை தெய்வீக ஓசைக்கு ஒப்பாக கருதப்படுகிறது அந்த ஓசை உருவாக்கும் ஆரா பெண்களை எதிர்மறை தாக்கத்திலிருந்து காக்கிறது.

இந்த தார்பரியம் இந்து புராணங்களில் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வளையல் ஒன்றோடு ஒன்று இடித்து கொள்ளும் போது க்ரியா சக்தி உருவாகி அது பெண்களின் சூரிய நாடியை தூண்டுவதாக சொல்லப்படுவதுண்டு. இந்த சூரிய நாடி உருவாக்க கூடிய ஆற்றல் பெண்களின் உடலை சுற்றி ஒரு ஆராவாக அவர்களை காக்கிறது என்பதே வளையோசையின் தத்துவம்

மேலும் வளையலின் எண்ணிக்கையை பொருத்து பலன்கள் மாறுபடும். மூன்று, ஆறு மற்றும் பன்னிரண்டு என்ற இலக்கில் பெண்கள் வளையல்கள் அணிவது வழக்கம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News