Kathir News
Begin typing your search above and press return to search.

பணத்தின் மீது பற்று அதிகமா? பணம் குறித்து ஆன்மீக சாஸ்திரங்கள் சொல்வதென்ன?

பணத்தின் மீது பற்று அதிகமா? பணம் குறித்து ஆன்மீக சாஸ்திரங்கள் சொல்வதென்ன?

பணத்தின் மீது பற்று அதிகமா? பணம் குறித்து ஆன்மீக சாஸ்திரங்கள் சொல்வதென்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 2:22 AM GMT

பொருள் ஈட்டுவது மனிதனின் முக்கிய கடமையாக உள்ளது. இவ்வுலக வாழ்வை வாழ்வதற்கு பொருள் மிக முக்கியமானது. சிலர் பொருள் ஈட்ட போராடுகின்றனர். சிலர் பொருள் ஈட்டுவதை தவிர வேறு எந்த குறிக்கோளும் இல்லாமல் வாழ்கின்றனர், அன்றாட உணவிற்க்கே சிரமப்படுபவர்களும் இருக்கின்றனர், கோடிகளில் ஒரு ரூபாய் கூட குறைய கூடாது என்று கடுமையாக உழைப்பவர்களும் இருக்கிறார்கள். எல்லோரும் பணத்தை நேசிக்கிறார்கள், வெறுப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள், பற்று அற்றவர்கககள் பணத்தின் மீது ஈர்ப்பு கொள்வதில்லை, பணம் படைத்தவர்களை பார்த்தே சிலர் பணத்தின் மீது வெறுப்பு கொள்கின்றனர். எந்த அளவிற்கு பணம் நமக்கு தேவைப்படுகிறது ?? அதற்கான எல்லை என்ன ??

செல்வம் சேர்ப்பதால் இந்த பூமியில் நாம் மகிழ்ச்சியாக மட்டும் அல்ல மரியாதையாகவும் வாழ முடியும். செல்வ பெருக்கம் இருக்குமாயின் நம் உடலையும் மனதையும் பொருள் ஈட்டுவதில் ஈடுபடுத்தாமல், பொருளை கொண்டு நாம் நினைக்கின்ற ரசிக்கின்ற விரும்புகின்ற காரியங்களை செய்யலாம். பணம் உண்மையில் ஒரு மனிதனின் அதிகாரத்தை மகிழ்ச்சியை சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது.

இந்து மத நூல்களின் வழக்கப்படி மனித முயற்சிகள் நான்கு அம்சங்களில் இருக்க வேண்டும், இவைகளை புருஷார்த்தங்கள் என்று சொல்லுவர். தர்மம் அர்த்தம் காமம் மோட்சம். உண்மையின் வழியில் நடந்து, செல்வதை சேர்த்து நயமான ஆசைகளை பூர்த்தி செய்து மோட்ச்சத்தை அடைய வேண்டும், இதற்காகவே சாஸ்திரங்கள் மனித முயற்சிகளை நான்கு பகுதிகளாக பிரித்துள்ளன.

இந்த நான்கு பாதையும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது, ஒன்றை மற்றொன்று பாதிக்கக்கூடியது. ஒன்றை இழந்து மற்ற மூன்றையும் பெறுவது பயனற்றதாகவே இருக்கும். ஒருவன் மோட்சத்தை மட்டுமே தேடினால் அவன் அர்த்தம் காமம் இரண்டையும் துறக்க வேண்டும், அவன் தர்மத்தின் வழியில் நடக்காவிட்டால் அதற்கான கர்மத்தை சுமந்தாக வேண்டும், ஆசைகளை பூர்த்தி செய்து தனக்கும் தன்னை சுற்றி இருபவர்களுக்குமான பொருள் தேவையை பூர்த்தி செய்து நேர் வழியில் வாழ்ந்து பிறகு மோட்சத்தை தேடுவது இந்த பூமியில் வாழ்கின்ற வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றும் .

அதே போல் உண்மையை மட்டுமே தேடுகிறவன் தர்மத்தின் வழியிலேயே நடக்கின்றவன் ஆசைகளை பூர்த்தி செய்யாமலோ பொருள் ஈட்டாமலோ இருந்தால் உலகத்தால் பழிக்கப்படுவான், அவன் மோட்சத்தை அடைவது எளிதாக இருந்தாலும் உலக வாழ்வில் அவன் தகுதி இல்லாதவனாகவே கருதப்படுவான், அதே போல் பொருள் ஏராளமாக வைத்திருப்பவன் தர்மத்தையும் காக்க முடியும், தன் ஆசைகளையும் நியாயமான வழியில் பூர்த்தி செய்ய முடியும் மோட்சத்திற்கான பாதையிலும் செல்ல முடியும்.

பொருளீட்டுவதில் மிகப்பெரிய ஆபத்தும் இருகிறது, பொருள் அதிகம் இருப்பவன் அதை கையாள தெரியாமல் அல்லது அதை தவறாக கையாண்டால் அந்த பொருள் அவனுக்கு கெட்ட கர்மாக்களை மட்டுமே கொடுத்து சிறைப்படுத்தி விடும். பணத்தின் தேவை இன்றியமையாதது

அனால் அதை கையாளும் தகுதியை வளர்த்துக்கொள்ளுதல் அதைவிட அவசியமானது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News