Kathir News
Begin typing your search above and press return to search.

வரலெஷ்மி விரதம் உருவான புராணம் - ஆடி வெள்ளி சிறப்பு #Spirituality

வரலெஷ்மி விரதம் உருவான புராணம் - ஆடி வெள்ளி சிறப்பு #Spirituality

வரலெஷ்மி விரதம் உருவான புராணம் - ஆடி வெள்ளி சிறப்பு #Spirituality

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 5:14 AM GMT

இன்று ஆடி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு பற்றி அறிந்து கொள்ளுங்கள். அது உருவான புராண வரலாற்றையும் அஷ்ட லெஷ்மிகளையும் தெரிந்து கொள்வது பலன் தரும்.

ஸ்ரீவரலட்சுமிவிரதம்;-

லட்சுமியினை போற்ற அனைத்து வளமும் நலமும் வீட்டில் கூடியேறும். செல்வ வளங்களை வாரி வழங்கும் மகாலட்சுமியை விரதமிருந்து அவள் அருளை பெறும் நன்னாளே வரலட்சுமி விரதம்.

மகாலட்சுமியை #தனலட்சுமி, #தான்யலட்சுமி, #தைரியலட்சுமி, #ஜெயலட்சுமி, #வீரலட்சுமி, #சந்தானலட்சுமி, #கஜலட்சுமி, #வித்யாலட்சுமி என்ற 8 விதமாக, அஷ்டலட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமிவிரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

இவ்விரதத்தை, விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். வரலட்சுமி விரத்தின் மூலம் அனைவரின் வீட்டிலும் செல்வங்களை பெருக்கி கொள்ள முடியும்.

வளங்களை அள்ளிதரும் வரலட்சுமி விரதத்திற்கு ஒரு கதை உண்டு. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர்களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகன் பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி.

அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப்பிடித்து வரத் தொடங்கினாள்.

அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங்களையும் இழந்தனர். தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள்.

அக்குடத்தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற்கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள்.

இந்த புராண நிகழ்வே ஸ்ரீவரலட்சுமிவிரதம் என பின்பற்றபட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News