Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க வினரை கெஞ்சும் நிலையில் ஸ்டாலின்! எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பெயரை தி.மு.க மேடையில் பேசிய ஸ்டாலின்!

அ.தி.மு.க வினரை கெஞ்சும் நிலையில் ஸ்டாலின்! எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பெயரை தி.மு.க மேடையில் பேசிய ஸ்டாலின்!

அ.தி.மு.க வினரை கெஞ்சும் நிலையில் ஸ்டாலின்! எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பெயரை தி.மு.க மேடையில் பேசிய ஸ்டாலின்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2019 4:30 AM GMT


எம்.எல்.ஏக்களுக்கு வலை விரித்து ஒன்னும் நடக்கவில்லை என்ற விரக்தியில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை உயர்த்தி பேசி வருவது தான் இன்றைய தி.மு.க தலைவரின் நிலை. இந்நிலையில் அ.தி.மு.க வின் உண்மையான விசுவாசிகள் தி.மு.க வுக்கு வரவேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் கட்சியின் உண்மையான தொண்டர்கள் தி.மு.க பக்கம் செல்லமாட்டார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.


எம்ஜிஆர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் இருக்கவேண்டிய இடம் அ.தி.மு.க அல்ல திமுக. ஆக அதிமுக தொண்டர்கள் தி.மு.க விற்கு வரவேண்டும்” பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின். கருணாநிதி மறைந்த சமயத்தில் நான் கலைஞரின் மகன் என்பதை அடிக்கடி அழுத்திச் சொல்லும் ஸ்டாலின் தி.மு.க அனுதாபிகளின் முழு ஆதரவும் தனக்கு கிடைத்துவிட்டது. ஆனால் இருக்கும் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.


இதனால் தனது மகனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்ற நிலையில் அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களை தி.மு.கவிற்கு கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார் திமுக தலைவர் ஸ்டலின். அப்போது தான் இங்கு இருக்கும் தலைவர்களை நம்பி தி.மு.க இல்லை என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் எடுத்து வருகிறார் ஸ்டாலின் என தி.மு.க நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்


அதுமட்டுமின்றி எதிரிக்கட்சியைச் சேர்ந்தவர் அதிமுகவின் அடையாளத்தை தனது மேடையில பேசும் அளவிற்கு இறங்கியுள்ளார் ஸ்டாலின் மேலும் நேற்றைய கூட்டத்தில் எப்பவோ போட்ட தூண்டிலில் இப்போதுதான் தங்க தமிழ்ச்செல்வன் மாட்டியிருக்கிறார் என்று ஸ்டாலின் கூறுகிறார்.


தூண்டிலில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சிக்கவில்லை. அதே போல் அமமுக கூடாரம் காலியாகி உள்ளது அங்கு இருந்தால் பருப்பு வேகாது என தங்க தமிழ் செல்வனுக்கு தெரியும். அதிமுகவனின் பக்கம் வரலாம் என யோசித்தால் ஓபிஎஸ் விடவில்லை இதன் காரணமாகத் தான் திமுகவில் தஞ்சம் புகுந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு தூண்டில் போட்டது தி.மு.க என பேசியிருப்பது நகைப்புக்குரியது என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர் .


பொன்முடி சட்டசபையில் பேசும் பொது ஜெயலலிதாவை அம்மா அம்மா என சொல்லி பேசினார் இதற்கும் தி.மு.கவிடமிருந்தது எந்த எதிப்பும் வரவில்லை . ஏற்கனவே தினகரன் ஆதரவாளர்களான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா விசுவாசிகளும் இ.பி.எஸ் ஓ.பி.எஸ் பக்கம் இருப்பார்களே தவிர அல்லது ஸ்டாலினின் வெற்று பேச்சை கேட்டு அங்கு செல்ல மாட்டார்கள் என்பதே நிதர்சனம்!


Next Story