Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் பயனாளிகளுக்கு ரூ.16712.72 கோடி - ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்களில் 81 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்!

பெண் பயனாளிகளுக்கு ரூ.16712.72 கோடி - ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்களில் 81 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்!

பெண் பயனாளிகளுக்கு ரூ.16712.72 கோடி - ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்களில் 81 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 March 2020 9:43 AM IST

மத்திய நிதியமைச்சகம் மகளிருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் சிறப்பு வசதிகளை உருவாக்கும் வகையில், கடந்த ஆறாண்டுகளில் பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. பெண்கள் சிறந்த வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லவும், தொழில்முனைவோராதல் என்ற கனவை நனவாக்குவதற்கான நிதி அதிகாரத்தை அளிப்பதாக இந்தத் திட்டங்கள் உள்ளன.

அதில் ஸ்டாண்ட-அப் இந்தியா திட்டம் பெண்களுக்கு பல்வேறு வகையில் உதவியுள்ளது. இந்தத் திட்டம் 2016 ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அடிப்படை நிலையில் பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காக இத் திட்டம் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் பழங்குடியினர் போன்ற வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கும், பெண் தொழில்முனைவோருக்கும், நிறுவனம் சார்ந்த கடன் வசதிகளை கிடைக்கச் செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களை பங்கேற்கச் செய்வது இத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

பசுமைத்தன்மை தொழில்நிறுவனங்களை உருவாக்க ஒவ்வொரு வங்கிக் கிளையும் குறைந்தபட்சம் ஒரு தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) அல்லது மலைவாழ் பழங்குடியின (எஸ்.டி.) பயனாளிக்கும், குறைந்தபட்சம் ஒரு பெண் தொழில்முனைவோருக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான தொகைக்கு கடன் வசதி அளிக்க வேண்டும் என்பது இத் திட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

17.02.2020 தேதியின்படி, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களில் 81 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்களாக உள்ளனர். பெண்களுக்காக 73,155 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பெண் பயனாளிகளுக்கு ரூ.16712.72 கோடி அனுமதிக்கப்பட்டு, ரூ.9106.13 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News