பெண்களை நிறுவன முதலாளிகளாக்கும் 'ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டம் ! இதுவரை 16,712 கோடி கடன் வழங்கி சாதனை
பெண்களை நிறுவன முதலாளிகளாக்கும் 'ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டம் ! இதுவரை 16,712 கோடி கடன் வழங்கி சாதனை

பிரதமர் மோடி அரசு தொடங்கி வைத்த திட்டங்களில் தொழில் செய்ய விரும்பும் பெண்களை எழுச்சியுற வைக்கும் முக்கிய திட்டம் 'ஸ்டாண்ட் அப் இந்தியா' ஆகும்.
இந்த திட்டம் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் மலை சாதி பெண்களை சிறப்பு சலுகைகளுடன் ஊக்குவிக்கிறது. மேலும் ஒரு வங்கி குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு இத்திட்டம் மூலம் நிதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பெண்கள் ரூ.10 இலட்சம் முதல் 1 கோடி வரை மிக குறைந்த வட்டியில் கடன் பெறலாம் என்பது சிறப்பம்சமாகும். இந்த ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் 2016 ஏப்ரல் 5 ந்தேதி அன்று தொடங்கப்பட்டது.
மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து கிரீன்ஃபீல்ட் நிறுவனங்களை உருவாக்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்த பயனாளிகளில் 81 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.16,712 கோடி ஆகும் என நிதி அமைச்சகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட பல்வேறு திட்டங்களை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்கண்ட திட்டங்கள் பெண்கள் தங்களை தொழில் முனைவோர் ஆக்கிக் கொண்டு வாழ்க்கை கனவுகளை நனவாக்கிக் கொண்டு வளப்படுத்திக் கொள்வதற்கு உதவுகிறது. வரும் மார்ச் 8 ம் தேதி நடைபெறும் சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக இந்த திட்டங்கள் பெண்களுக்கு உதவியுள்ளதாக அமைச்சகம் பெருமிதத்துடன் இத் தகவல்களை தெரிவித்துள்ளது.