Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றி எனும் வாசலை அடைவதற்கான பத்து படிகள் என்னென்ன?

வெற்றி எனும் வாசலை அடைவதற்கான பத்து படிகள் என்னென்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2020 1:39 AM GMT

வெற்றி நம் மனதில் துவங்குகிறது. ஒருவர் நம்பிக்கையாளராக இருக்க வேண்டும். நீங்கள் சாதனையாளர் ஆக விரும்பினால் உங்களை குறைவாக மதிப்பிடாதீர்கள். "என்னால் முடியும்" என்ற மந்திரத்தால் உங்களை நீங்களே ஒவ்வொறு செயலிலு ம் ஆச்சரியப்படுத்துங்கள். வெற்றியை அடைய முதலில் நீங்கள் கடக்க வேண்டிய படி "சுய நம்பிக்கை"

எங்கு செல்வது என்ற தெளிவின்றி திசையெங்கும் ஓடி என்ன பயன்? எங்கு செல்லவேண்டும். கூர்மையான சிந்தனையை மனதில் நட்டுவையுங்கள். உங்கள் பந்தை எங்கு சரியாக அடிக்கமுடியும் என்பதில் தெளிவு கொண்டு உங்கள் திறமைகளை அங்கே குவியுங்கள். வெற்றியை அடைய நீங்கள் கடக்க வேண்டிய இரண்டாம் படி "இலக்கில் தெளிவு"

உங்கள் இலக்கு உண்மைதன்மைய, நிதர்சனத்தில் சாத்தியமானவையாக இருக்க வேண்டும். கனவுக்கு அப்பாற்ப்பட்டதாகவோ, உங்கள் திறமைக்கு குறைவானதாகவோ இல்லாமல் பார்த்து கொள்ளூங்கள். சாவல்நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் சாத்தியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் கடக்க வேண்டிய மூன்றாம் படி "சரியான இலக்கி நிர்ணயிப்பது"

கதிரொளி ஒரு லென்ஸின் மூலமாக ஒரு காகிதத்தில் குவிக்கப்படுமே ஆனால் அந்த காகிதத்தின் நிலையே வேறு. அதற்கொப்ப உங்கள் ஆற்றலை அதிதீவிரத்துடன் குவியுங்கள். நீங்கள் கடக்க வேண்டிய நான்காம் படி "கவனத்தை குவிப்பது"

உங்கள் பெரும் இலக்கை சிறிய சிறிய இலக்குகளாக பிரித்து கொள்ளுங்கள். உங்கள் மாதாந்திர திட்டங்களை வாராந்திர திட்டங்களாக வகுத்து செயல்படுங்கள். செயல்பட்டுகொண்டேயிருங்கள். வெற்றிக்கு வேறு எந்த குறுக்குவழியும் இல்லை. இதுவே நீங்கள் கடக்க வேண்டிய ஐந்தாம் படி

சவால்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை. யார் சவால்களை தேர்தெடுக்கிறார்களோ அவர்கள் சாதிக்கிறார்கள். சவால்களை குறைக்க சிறந்த வழி அதை எதிர்கொள்வது மட்டுமே. வெற்றியின் ஆறாம் படி "சவால்களை எதிர்கொள்வது"

செயல்களை முன்னெடுப்பவர்கள் முன்னேற்றம் காண்கிறார்கள். அவர்கள் வெற்றிகாக காத்திருப்பதில்லை களத்தில் இறங்கி வெற்றியை கையில் அள்ளுகிறாகள். கடக்க வேண்டிய ஏழாம் படி "செயல்களை முன்னெடுப்பது"

மலையை பார்த்து கொண்டேயிருப்பதால் மட்டுமே ஒருவரால் அதை கடந்துவிட முடியாது. வெற்றியின் எட்டாம் படி "போராட தயாராக இருங்கள்"

உங்கள் குறி தவறினால் உங்கள் முயற்சி தவறென்று பொருளல்ல. யார் ஒருவர் தன் தவறுக்கு முழு பொறுப்பு எடுத்து கொள்கிறாரோ அவர்களே விரைவில் வெற்றியை எட்டிபிடிக்கிறார்கள். "பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்" அதுவே ஒன்பதாம் படி

வாழ்வில் போதுமென்று சோர்ந்துவிட்டவர்கள் தாம் வெற்றிக்கு எத்தனை அருகில் இருந்தோம் என்பதை அரிய வாய்ப்பேயில்லை. வெற்றிக்கு தேவை வெகு அதீதமான விடாமுயற்சி. எப்போதும் ஆட்டத்தில் இருந்து விலகிவிடாதீர்கள்.

இந்த பத்துபடிகளை கடந்த நொடியில் நீங்கள் நிற்பது வெற்றியின் வாசலாக த்தான் இருக்க முடியும்.

Next Story