Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 30 கோடிக்கும் அதிகமானோருக்கு 28, 256 கோடி வழங்கப்பட்டு உள்ளது!

பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 30 கோடிக்கும் அதிகமானோருக்கு 28, 256 கோடி வழங்கப்பட்டு உள்ளது!

பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 30 கோடிக்கும் அதிகமானோருக்கு 28, 256 கோடி வழங்கப்பட்டு உள்ளது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2020 7:54 AM GMT

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 1.7 லட்சம் கோடியில் பல்வேறு அறிவிப்புகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 26 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை, 30 கோடிக்கும் அதிகமானோருக்கு 28 ஆயிரத்து 256 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், ஜன் தன் வங்கி கணக்கு வைத்துள்ள, 19.86 கோடி பெண்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் தலா 500 ரூபாய் வீதம் 9,930 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், மொத்தமுள்ள எட்டு கோடி பேரில் 6.93 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா 2,000 ரூபாய் வீதம் மொத்தம் 13 ஆயிரத்து, 855 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் விதவைகள், முதியோர், மாற்றுத் திறனாளகள் என 2.82 கோடி பேருக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 1,405 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல 2.16 கோடி கட்டிடத் தொழிலாளர்களுக்கு 3,066 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story