Kathir News
Begin typing your search above and press return to search.

துணிவு, தலைமை, தனித்துவம். இதுவே சுபாஸ் சந்திரபோஸை வரலாற்று நாயகனாக்கியது..

துணிவு, தலைமை, தனித்துவம். இதுவே சுபாஸ் சந்திரபோஸை வரலாற்று நாயகனாக்கியது..

துணிவு, தலைமை, தனித்துவம். இதுவே சுபாஸ் சந்திரபோஸை வரலாற்று நாயகனாக்கியது..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 1:54 AM GMT

அறிமுகம்

இவர் பிறந்த தேதி ஜனவரி 23, 1897. நேதாஜி என்றும் அழைக்கப்படும் இவர், நம் இந்திய தேசத்தின் தனித்துவம் மிக்க தலைவர். நாட்டின் சுதந்திரத்திற்காய் தன்னை அர்பணித்த நாயகன்.

நேதாஜி வாழ்வில் நிகழ்ந்த சுவரஸ்யமான நிகழ்வு:

ஆங்கிலத்தில் அதீத புலமை கொண்டவர் சுபாஸ் சந்திர போஸ், அவர் ஆங்கில புலமைக்கு சவால் விடும் நோக்குடன் அவரிடம் ஓர் கேள்வி கேட்கப்பட்டது. "ஸ்கூல் மாஸ்டருக்கும்(school master)" "ஸ்டேஷன் மாஸ்டருக்கும்(Station master)" என்ன வித்தியாசம்? என்பது தான் கேள்வி. சற்று நேரம் கூட தாமதிக்காமல் நேத்தாஜி அளித்த பதில் "School master one who trains the mind, station master one who minds the train" பள்ளி ஆசிரியர், அறிவிற்க்கு பயிற்சியளிப்பவர். ஸ்டேஷன் மாஸ்டர், இரயில்களை கவனிப்பவர்" என்று தமிழில் பொருள்பட்டாலும் ஆங்கிலத்தில் அவர் நிகழ்த்திய வார்த்தை ஜாலம் ஆங்கிலேயர்களேயே அசரடித்ததாம்.

நேத்தாஜியின் பொன்மொழிகள்

- அநீதியோடும் தவறோடும் சமரசம் செய்து கொள்வதே மாபெரும் குற்றம்

- ஓர் மனிதன் தன்னுடைய சிறந்த சிந்தனைக்காக உயிரையும் கொடுக்கலாம். அப்போது தன அந்த சிந்தனை, பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்புடன் இருக்கும்.

- உண்மையான மாற்றங்கள் எதுவும் பேசிக்கொண்டிருப்பதால் மட்டுமே ஏற்பட்டு விடாது.

இவரின் பலம்

இவருடைய தலைமை பண்பு.

உண்மையான வீரருக்கு மன பலம் உடல் பலம் மட்டுமல்ல ஆன்மீகம் சார்ந்த பலமும் இருக்க வேண்டும் என்று புதுமையாக சிந்தித்த தலைவர். இவரின் தலைமை பண்பு இன்றைய காலகட்டத்திலும் வியந்த பேசப்படும் ஒன்று. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் கேட்பவருக்கெல்லாம் புதிய உத்வேகத்தை பாய்ச்ச கூடிய வண்ணம் பேசக்கூடிய பேச்சாளர். உங்கள் இரத்தத்தை தாருங்கள், சுதந்திரத்தை நான் வாங்கி தருகிறேன்" போன்ற இவருடைய புகழ்பெற்ற பேச்சுகள் பெரும் புரட்சியை ஏற்படுத்தின.

இவர் வாழ்க்கை சொல்லும் பாடங்கள்

இவருடைய தந்தைக்கு இவர் சிவில் சர்விஸில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பமாம். அதற்கேற்ப அத்துறையில் இவர் பெற்ற மதிப்பெண் அன்றைய காலகட்டத்தில் பெரும் ஆச்சர்யத்தையும், பாராட்டுகளையும் அவருக்கு பெற்று தந்தது. இயல்பாக சமூக அக்கறை கொண்டவர் போஸ். அதையே இலக்காக வரித்து தான் சந்தித்த சூழ்நிலைகள், எதிர்கொண்ட சவாலகள் என அனைத்தையும் தன் இலக்குக்கு ஏற்றதாக மாற்றி கொண்டார். சிறந்த பேச்சாளரான போஸ், வெறும் பேச்சோடு மட்டுமே நிற்காமல் அதற்கு செயல் வடிவம் கொடுக்க முனைந்து செயல்பாடுகளில் இறங்கியதே அவருடைய தனித்தன்மை.

இவர் பணியாற்றிய களம், தேசிய நலனுக்காக என்றாலும். தனிமனித நலனிற்காக சிந்திக்கிற எவருக்கும் அவருடைய பண்புகள் சாலபொருந்தும். அவரை போலவே, அவருடைய குணங்கலான துணிச்சல், தெளிவு, தன்மீது தமக்கே இருக்கும் நம்பிக்கை என பலதும் தனிமனித வாழ்க்கையில் வெல்ல நினைக்கிற அனைவருக்குமான பாடங்கள்.

Next Story