Kathir News
Begin typing your search above and press return to search.

நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தமிழ்நாட்டிற்கு நடந்து வந்த மாணவர் பலி!

நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தமிழ்நாட்டிற்கு நடந்து வந்த மாணவர் பலி!

நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தமிழ்நாட்டிற்கு நடந்து வந்த மாணவர் பலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 5:30 AM GMT

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து தன்னுடைய நண்பர்களுடன் தமிழ்நாட்டிற்கு நடந்து வந்த மாணவர் ஒருவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி லோகேஷ். இவர் நாக்பூரில் உணவு பதப்படுத்தும் பயிற்சியில் இருந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது.

இதனால் உண்ண உணவு கூடக் கிடைக்காததால் அவர் மற்றும் அவரது 29 நண்பர்களுடன் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 1300 கிலோ மீட்டர் தூரம் உள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்ல லோகேஷின் முடிவு செய்துள்ளார். 9 நாட்கள் நடந்து வந்த அவர்கள் வழியில் வந்த லாரி மற்றும் கிடைக்கும் வாகனங்களில் சிறிது தூரம் வந்துள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத் அருகே செகந்தராபாத் வரும் போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அப்போது திடீரென்று லோகேஷ்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News