Kathir News
Begin typing your search above and press return to search.

துயர நேரத்திலும் கொரோனா-வை வைத்து மத வெறுப்பு அரசியல் செய்யும் சுப.வீரபாண்டியன்

துயர நேரத்திலும் கொரோனா-வை வைத்து மத வெறுப்பு அரசியல் செய்யும் சுப.வீரபாண்டியன்

துயர நேரத்திலும் கொரோனா-வை வைத்து மத வெறுப்பு அரசியல் செய்யும் சுப.வீரபாண்டியன்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 3:38 AM GMT

கொரோனா தொற்று நோயால் தமிழகம் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், பல அரசியல் கட்சிகளும், தொழிலதிபர்களும், செல்வந்தர்களும், ஏழை எளிய மக்களும் கூட தங்களால் இயன்ற உதவியை பொது மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசையும், மாநில அரசையும் எப்போதும் குறை கூறிக்கொண்டிருக்கும் சில அரசியல் இயக்கங்கள் பொது மக்களுக்கு என்ன செய்தன என்ற கேள்வி மக்களிடத்திலே இருக்கும் நிலையில், கொரோனாவை வைத்து மத வெறுப்பை அரசியலை தூண்டி இருக்கிறார் சுப வீரபாண்டியன்.

ஈ.வெ.ரா-வின் வழியில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை என்ற இயக்கத்தை நடத்தி வரும் சுப வீரபாண்டியன், தற்போது தமிழகம் எதிர்கொண்டுள்ள துயர நிலையிலும் இந்து மத வெறுப்பு அரசியல் செய்ய களமிறங்கியுள்ளார். கொரோனவையும் அத்திவரதரையும் ஒப்பிட்டு இந்து மத வெறுப்பை விதைக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் சுப வீரபாண்டியன்.

இந்த பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் "ஒரே இடத்தில்" இருந்து வந்தவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அவர்களை ஒரு மதமாய் அடையாளப்படுத்தாமல் அவர்கள் மீது வெறுப்பை விதைக்காமல் மாறாக அவர்களை அரவணைத்து மத்திய அரசும் மாநில அரசும் அவர்கள் அனைவரும் குணமடைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வரும் நிலையில் தான் இந்து மத வெறுப்பு அரசியல் தமிழ் மண்ணில் ஆதரிக்கப்படுகிறது.

"ஒரே இடத்தில்" இருந்து வந்தவர்களை அவர்களின் இயக்கத்தின் பெயரையோ அல்லது மதத்தின் பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்பதில் தீவிரம் காட்டும் மாநில அரசு, சுப வீரபாண்டியனின் இந்து மத வெறுப்பை அரசியலை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. ஒரு வேளை, இதற்கு பதில் தரும் விதத்தில், "ஒரே இடத்தில்" இருந்து வந்தவர்களை பொது மக்கள் அடையாளப்படுத்தி பேச துவங்கினால், அதை வைத்து மத அரசியலை தூண்டி குளிர் காயலாம் என்பது சுப வீரபாண்டியனின் நோக்கமா என்பதும் தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News