Kathir News
Begin typing your search above and press return to search.

150 நாட்களுக்குள் 12 லட்சம் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தொடர் சாதனை

150 நாட்களுக்குள் 12 லட்சம் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தொடர் சாதனை

150 நாட்களுக்குள் 12 லட்சம் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தொடர் சாதனை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Feb 2019 6:44 PM GMT


பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி தொடங்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வீதம் 10.74 ஏழை குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது


இதற்காக இதுவரை 1.7 கோடி பயனாளர்கள் அட்டை அச்சடிக்கப்பட்டுள்ளது. 14,856 ஆஸ்பத்திரிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் சாதாரண, சாமானிய மக்களுக்கும் சுகாதாரத் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய அரசு முன்னெடுத்து வைத்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரத் திட்டங்களில் உரிய பலன் கிடைக்கும் வகையில், பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் – ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள்


ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும்வகையில் அமல்படுத்தப்படுகிறது. 10.74 கோடி குடும்பங்களுக்கு மேல் (ஏறத்தாழ 50 கோடி பயனாளிகள்) இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற தகுதியுள்ளவர்கள் ஆகின்றனர். உடனடியாக ரொக்கமாக பணம் செலுத்தாமலேயே, ஆவணங்கள் எதுவுமின்றி பயனாளிக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, அதிகபட்ச மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது. நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல், தகுதி படைத்த குடும்பங்களுக்கு தரமான மருத்துவ சேவையை இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் உலக அளவில், அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மிகப் பெரிய சுகாதார பாதுகாப்புத் திட்டமாக உருவாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரும்முன் காப்பது, நோயை குணப்படுத்துவது, நோயாளியை பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன் செயல்படுத்தப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News