செங்கத்தில் ஜெயலலிதா முழு உருவ சிலை திடீர் அகற்றம், தொண்டர்களிடையே பரபரப்பு!
செங்கத்தில் ஜெயலலிதா முழு உருவ சிலை திடீர் அகற்றம், தொண்டர்களிடையே பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று அதிமுகவினர் கழக கொடி ஏற்றுதல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதில், இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொள்வதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத்தொடந்து அப்பகுதிக்கு வந்த செங்கம் காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் உடனடியாக சிலையை அகற்றி விட கோரினர். இதனால் அங்குள்ள பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் சிலையை எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் கூடிய தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட இடம் அதிகாரிகளின் அனுமதி பெறாத இடமா அல்லது நிகழ்ச்சி உரிய அனுமதி பெறப்படாமல் திட்டமிடப்பட்டதா என தெரியவில்லை, எனினும் அப்புறப்படுத்தப்பட்டது ஜெயலலிதா சிலை என்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.