Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகரை மணக்கிறாரா சுனைனா?

நடிகரை மணக்கிறாரா சுனைனா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2020 6:10 AM GMT

தமிழில் 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருபவர் விரைவில் நடிகரும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதருமான கிருஷ்ணாவை மணக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - கிருஷ்ணா இணைந்து நடிப்பில் வெளியான திரைப்படம் 'வன்மம்'.

இதில் முதன் முறையாக கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார் சுனைனா. அதில் ஆரம்பித்த இருவரின் நட்பும் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014-ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை மணந்து கொண்ட கிருஷ்ணா, இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2016-ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News