Kathir News
Begin typing your search above and press return to search.

'சூரரைப் போற்று' புரமோஷனை ஸ்டார்ட் செய்த சூர்யா, சமுதாய கருத்தை கூற ஆரம்பித்தார் - அப்படியாவது தியேட்டர் அதிபர்கள் படத்திற்கு இடம் தருவார்களா? #Surya #Karthi #Sooraraipotru #EIA2020

'சூரரைப் போற்று' புரமோஷனை ஸ்டார்ட் செய்த சூர்யா, சமுதாய கருத்தை கூற ஆரம்பித்தார் - அப்படியாவது தியேட்டர் அதிபர்கள் படத்திற்கு இடம் தருவார்களா? #Surya #Karthi #Sooraraipotru #EIA2020

சூரரைப் போற்று புரமோஷனை ஸ்டார்ட் செய்த சூர்யா, சமுதாய கருத்தை கூற ஆரம்பித்தார் - அப்படியாவது தியேட்டர் அதிபர்கள் படத்திற்கு இடம் தருவார்களா? #Surya #Karthi #Sooraraipotru #EIA2020

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 7:49 AM GMT

தமிழ் திரையுலகத்தில் அவ்வபோது ஒரு ட்ரெண்ட் வரும் அது ஒருகாலத்தில் புராண கதைகளின் மீது பயணம் செய்தது, பின் புரட்சிகரமான கதைகள் என்கிற பெயரில் வசனத்தை அடிப்படையான கொண்ட கதைகளின் மீது பயணம் செய்து அரசியல் பேசி வெற்றி கண்டது. இதில் தான் "பராசக்தி", "மனோகரா" போன்ற படங்கள் அடக்கம் இதில் கருணாநியின் வசனங்களும், சிவாஜியின் நடிப்பும் ஒரு ட்ரெண்ட் செட்டாக மாறியது.

பின்பு காலத்திற்கேற்ப சினிமாவின் வெற்றிக்கான சூத்திரங்களும் மாறின அதன்பின் ஸ்டுடியோ'வில் சுற்றி கொண்டிருந்த சினிமாவை பாரதிராஜா கிராமத்து வயல்வெளிகளுக்கு இழுத்து சென்றார் அது பல காலம் ட்ரெண்டாக வலம் வந்தது. பின் மணிரத்னம், அதன்பின் ஷங்கர் வருகைக்கு பிறகு தமிழ் சினிமாவின் வெற்றி சூத்திரமே மாறியது பார்வையாளர்களின் பார்வையே மாறியது. தற்பொழுது ரசிகனின் ரசனைக்கேற்ப படங்களை கொடுப்பது மிக சவாலானது.

அதிலும் குறிப்பாக இன்று விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு படைப்பாளியின் படத்தை திரையரங்கில் வெளியிட்டு அதனை ரசிகனை பார்க்க வைக்க நிறைய பேர் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர். சிலர் கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் சமூகத்தில் அன்றைய நிகழ்வாக பார்க்கப்படும் விஷயத்தை கையில் எடுத்து அதில் ஒரு குறிப்பிட்ட கருத்தை கூறி அதை விவகாரமாகவோ அல்லது விவாதமாகவோ மாற்றி அந்த வெளிச்சத்தில் தங்களின் படத்தை முன் நிறுத்துகின்றனர்.

அந்த வரிசையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் சகோதர நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் கைதேர்தவர்களாக மாறிவிட்டனர். சரியாக படம் ரீசாகும் போதோ, அல்லது தங்களின் படம் சரியாக இல்லை என அவர்கள் உணரும் போது மட்டுமே இந்த கருத்துக்கள் வெளிவரும் மற்ற நாட்களில் இவர்கள் மூச்சு காத்து சத்தம் கூட வெளிவராது.

தற்பொழுது கூட நேற்று கார்த்தி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "உழவன் ஃபவுண்டேஷன்" என்கிற அமைப்பின் நிறுவனர் என்கிற முகத்துடன் EIA 2020 எனப்படும் Environmental Impact Assessment என்ற மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகளை பற்றி குறிப்பிட்டு அதனை விமர்சனமும் செய்து அதில் திருத்தமும் வேண்டும் என இரண்டு பக்க அளவில் பதிவிட்டுருந்தார். அதனை இன்று அவரின் அண்ணனும் சூரரைப் போற்று படத்தின் நாயகனுமாகிய சூர்யா ரீட்விட் செய்து

"பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..

#EIA2020"

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை பதிவிட்டிருக்கிறார்.

இதனை இணையத்தின் வைரலாக அனைவரும் பார்க்கும் நேரத்தில் இதன் பிண்ணனியில் சில உண்மைகளும் இருக்கின்றன. அதாவது கடந்த வாரம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில் "சூர்யா'வின் மனைவி ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படத்தை தியேட்டர் உரிமையாளர்களின் கருத்தை மீறி சூர்யா ஓ.டி.டி தளம் என்று சொல்லப்படும் அமேசோன் நிறுவனத்திற்கு விற்றதால் நாங்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி போன்ற சிவக்குமார் குடும்ப உறுப்பினர்களின் படத்தை ரிலீஸ் செய்ய போவதில்லை என அறிப்பாகவே வெளியிட்டிருந்தனர்.

மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் "ஓ.டி.டி யில் அவர்கள் படத்தை வெளியிட முனவந்த பொழுது எங்களின் வாழ்வாதாரத்தை நினைத்து பார்க்கவில்லை. அதனால் அவர்களின் குடும்ப படத்தை ஓ.டி.டி தளத்திலேயே ரிலீஸ் செய்து கொள்ளட்டும்" என அறிக்கையும் கொடுத்தார்.

இந்த நிலை உணர்ந்து சுதாரித்து கொண்ட சூர்யா குடும்பத்தினர் தற்பொழுது தங்களை பேசு பொருளாக முன்னிருத்த இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு அந்த வெளிச்சத்தில் தங்கள் படங்களை புரமோட் செய்ய நினைக்கின்றனர்.

மேலும் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் அவரின் சொந்த கம்பெனியான 2D'யின் தயாரிப்பாகும் அதற்கு 55 முதல் 60 கோடி வரை செலவழித்துள்ளார். இது ஓ.டி.டி'யில் வெளியிட்டால் அதிகபட்சம் 3 முதல் 5 கோடி வரைதான் லாபம் பார்க்க இயலும்.திரையரங்கில் வெளியிட்டால் மட்டும்தான் லாபமும், ரசிகர்களையும் ஒருங்கே இணைக்க முடியும். ஜோதிகா 'பொன்மகள் வந்தாள்' அந்தளவிற்க்கு எதிர்பார்ப்பு இல்லை ஆகையால் அது ஒ.டி.டி சென்றாலும் கவலை இல்லை முதலீடு செய்த பணத்தை எடுத்துவிட்டார்கள்.

ஆனால் சூர்யா'வின் படம் என்பது ரசிகர்களை திருப்திபடுத்தவும், அடுத்த கட்டமாக சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் ஹரியின் படங்கள் ஒப்பந்தம் செய்யபட்டிருப்பதால் அதனின் வியாபார வட்டமும் இந்த 'சூரரைப் போற்று' வெளியீட்டில் அடங்கியிருக்கிறது. எனவே தற்பொழுது தியேட்டர் உரிமையாளர்களை சமாதானபடுத்துவதை தவிர வேறு வழி கருத்து கூறுவதன் மூலம் தன் சொந்த படத்தை பிரபலமாக்கி அதனை தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல விலையில் விற்க சூர்யா'வின் கணக்கே இது என்ற விஷயம் அடங்கியுள்ளது.

கருத்து கூறுவது தப்பில்லை சூர்யா குடும்பத்தினரே, ஆனால் முருகர் வேஷமிட்டு நடித்து பணம், புகழ் சம்பாதித்த நடிகர் சிவக்குமார் அவர்கள் கந்த சஷ்டி விவகாரத்தில் அமைதியாய் இருந்துவிட்டு படம் வெளியீட்டில் பிரச்சினை வரும்பொழுது கருத்து சொல்வதுதான் பிரச்சினை என பொதுமக்கள் நினைக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News