Kathir News
Begin typing your search above and press return to search.

“புதிய கல்வி கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா பேச்சு, வன்முறையை தூண்டுவதாக உள்ளது” - ஹெச்.ராஜா கடும் கண்டனம் !!

“புதிய கல்வி கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா பேச்சு, வன்முறையை தூண்டுவதாக உள்ளது” - ஹெச்.ராஜா கடும் கண்டனம் !!

“புதிய கல்வி கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா பேச்சு, வன்முறையை தூண்டுவதாக உள்ளது”  -  ஹெச்.ராஜா கடும் கண்டனம் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2019 12:50 PM GMT



சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான விஷத்தைக் கக்கினார். அதாவது அவருக்கு யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே வாந்தி எடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் கண்மூடித்தனமாக அவர் கூறியதை ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார். இந்தி வேண்டாம், இருமொழி கொள்கையே போதும் போன்ற திமுகவின் கருத்துக்களுக்கு செய்தித்தொடர்பாளாக சிறப்பாக பணியாற்றினார்.


இதில் வேடிக்கை என்ன வென்றால், இவரும் சரி, இவரது தம்பி கார்தியும் சரி, இவரின் மகளும் சரி இரு மொடி பாடத்திட்டமான அரசு பள்ளிகளில் படத்தவர்கள் அல்லது படிப்பவர்கள் அல்ல. இந்தி கட்டாயமாக உள்ள பள்ளிகளில்தான் படிக்கின்றனர். ஆனால் ஏழைத்தமிழர்கள் எந்த சூழ்நிலையிலும் இந்தி படித்துவிடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக உள்ளார், அதாவது திமுக தலைவர் ஸ்டாலின் போலவே.


தமிழகத்தில் அனைவனிர் பாராட்டையும் பெற்ற ஒரே துறை என்றால் அது கல்வித்துறைதான். அந்த துறையையையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவருக்கு கொடுத்தை வசனங்களை மிகச்சிறப்பாக பேசிவிட்டு சென்றார்.


மொத்தத்தில் நடிகர் சூர்யாவின் பேச்சு, தமிழர்களை தூண்டிவிடும் செயல் என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் யாருக்கும் இல்லை. இந்த கருத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் வெளியிட்டு உள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜகவின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதுதொடர்பாக பேசினார். அவர் கூறியதாவது:-


மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
திமுக எம்.பி. கனிமொழி இந்தி படிக்கும்போது, மக்கள் இந்தி படிக்க கூடாதா?. இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.


இவ்வாறு ஹெச்.ராஜா பேசினார்.


Next Story