திராவிட கட்சி தலைவர்கள் ஏன் தமிழ் பெயர்களை வைத்துக்கொள்ளவில்லை - சுப்பிரமணியன் சுவாமி விளாசல் !
திராவிட கட்சி தலைவர்கள் ஏன் தமிழ் பெயர்களை வைத்துக்கொள்ளவில்லை - சுப்பிரமணியன் சுவாமி விளாசல் !

சமஸ்கிருத மொழியிலேயே தங்கள் பெயர்களை வைத்து கொண்டு சமஸ்கிருத பல்கலைக்கழக மசாேதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திராவிட கட்சி தலைவர்களை கண்டால் வேடிக்கையாக உள்ளது என்று பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இரண்டு சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மற்றும் திருப்பதியில் உள்ள ஒரு சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சமஸ்கிருத மொழியில் தங்களது பெயர்களை வைத்துள்ள திராவிட தலைவர்கள் மசோதா நிறைவேறியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மேலும் ஈரோடு வெங்கடப்பா ராமசாமி பெரியாராக மாறியது, தட்சிணாமூர்த்தி என்ற பெயர் கொண்டவர் கருணாநிதியாக மாறியது, வை கோபால்சாமி என்ற பெயர் கொண்டவர் வைகோவாக மாறியது ஏன், என்றும் அவர்கள் ஏன் தமிழ் பெயர்களை வைத்துக்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார். சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை தேசிய பல்கலைக்கழங்களாக மாற்றும் மசோதா நிறைவேற்றத்திற்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு சுவாமி நன்றி கூறினார்.