Begin typing your search above and press return to search.
தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழப் போவது உறுதி - முழங்கும் பிரேமலதா விஜயகாந்த்!
தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழப் போவது உறுதி - முழங்கும் பிரேமலதா விஜயகாந்த்!

By :
சென்னை பூந்தமல்லியில் நடைபெற்ற தே.மு.தி.க. நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2021-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழப் போவது உறுதி என தெரிவித்தார்.
நடிகர் ரஜினி கருத்து என்னவென்றால் ஜெயலலிதாவும் இல்லை, கலைஞரும் இல்லை, தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உள்ளது. இதுதான் சரியான நேரம், ஆட்சி மாற்றம்! அரசியல் மாற்றம்!
இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று அவர் சொல்வதாகவும், வருகின்ற 2021 பொதுத் தேர்தல் இது எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல முடிவு வரும். நிச்சயமாக மாபெரும் மாற்றம் தமிழக அரசியலில் நிகழப் போவது உறுதி அதுதான் எங்களுடைய கருத்தும் கூட என தெரிவித்தார்.
Next Story