தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு 23 ஆக உயர்வு - அமைச்சர் ட்வீட் மூலம் உறுதி!
தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு 23 ஆக உயர்வு - அமைச்சர் ட்வீட் மூலம் உறுதி!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது. இதனால் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த ஒருவர் குணமடைந்து விட்டார் மற்றும் மற்றொருவர் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்தார்.
இந்த தருணத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவருடைய டுவிட்டர் பக்கம் பதிவில்: சேலத்தில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியா சேர்ந்த நான்கு பேர் மற்றும் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.