தமிழகத்தில் 2,200 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு - அமைச்சர் தங்கமணி தகவல்!
தமிழகத்தில் 2,200 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு - அமைச்சர் தங்கமணி தகவல்!

கொரோனா எதிரான நடவடிக்கைகளில் ஒற்றுமையை காட்டும் விதமாக ஏப்ரல் 5-ஆம் தேதி (நேற்று) இரவு 9 மணிக்கு ஒன்பது நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கேற்றினார். இந்நிலையில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி "ஒரே நேரத்தில் மின் விளக்குகள் அழைக்கப்பட்டதால் தமிழகத்தில் 2200 மெகாவாட் மின்சாரம்" சேமிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாகவும், ஒரே நேரத்தில் மின் விளக்குகள் அனணக்கப்படுவதால் 1,200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஆனால் எதிர்பார்த்ததைவிட 2200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாகத் கூறியவர். மேலும் மின்சார வாரியம் சரியாக பணியாற்றியது காரணத்தால் தமிழகத்தில் எந்த பிரச்சனையும் வரவில்லை எனவே ஒத்துழைப்பு தந்த மக்களுக்கும், மின்சார வாரிய ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.