Kathir News
Begin typing your search above and press return to search.

"மக்கள் தன் கடமையை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் கொரோனோ பிடியில் இருந்து மீளலாம்" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் #Tamilisai #covid19

"மக்கள் தன் கடமையை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் கொரோனோ பிடியில் இருந்து மீளலாம்" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் #Tamilisai #covid19

மக்கள் தன் கடமையை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் கொரோனோ பிடியில் இருந்து மீளலாம் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் #Tamilisai #covid19

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jun 2020 7:10 AM GMT

மக்களின் ஒத்துழைப்பே முக்கியம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது,

"சென்னையைப் போன்ற பெருநகரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமாகும். சிறிது நேரமாக இருந்தாலும் வெளியே சென்று வரும்போது அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தைவானில் 50 சதவீத தொற்று முககவசம் அணிந்ததால் மட்டுமே குறைந்தது. எனவே முககவசம் அணிவதை யாரும் அலட்சியமாக எண்ணக்கூடாது.

கர்ப்பிணி பெண்களும் மற்ற நோய் உள்ளவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். உணவு முறை வாழ்க்கை முறை ஆகியற்றால் கொரோனாவை நிச்சயம் வெல்லலாம். கபசுர குடிநீர், மஞ்சள் கலந்த பால் ஆகியவை உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தெலங்கானாவில் கொரோனா தடுப்புக்காக ஆர்சனிக் ஆல்பம் மருந்து கொடுக்கப்படுகிறது.

ரப்பர் கையுறைகள் எந்த விதத்திலும் நோய்கிருமிக்கு எதிராக பாதுகாப்பு தராது. கிருமிநாசினி கொண்டு கைகளை நன்றாக கழுவி சாதாரண கையுறைகளை அணிந்து கொள்வது நல்ல பாதுகாப்பை அளிக்கும். தமிழக அரசு மற்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.

ஜூன்-ஜூலை மாதங்களில் கொரோனா உச்சத்தை எட்டும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் சமுதாய கடமையை புரிந்து கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால் விரைவில் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வரலாம்" என்று அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News