Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழகம் 2-வது இடம்! மக்களவையில் மத்திய அமைச்சர் பதில்!!

ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழகம் 2-வது இடம்! மக்களவையில் மத்திய அமைச்சர் பதில்!!

ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழகம் 2-வது இடம்! மக்களவையில் மத்திய அமைச்சர் பதில்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2019 6:47 AM GMT


மத்திய அரசால் பராமரிக்கப்படும் நினைவுச்சின்னங்கள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.


மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், மக்களவையில் நாடு முழுவதும் நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். நாடு முழுதும் 321 நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 75 நினைவுச்சின்னங்களும் தமிழகத்தில் 74 நினைவுச் சின்னங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


கர்நாடகாவில் 48 மற்றும் மகாராஷ்டிராவில் 46 நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


Next Story