Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக சூர்யாவுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கர்நாடக பா.ஜ.க எம்.பி சூர்யா!

தமிழக சூர்யாவுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கர்நாடக பா.ஜ.க எம்.பி சூர்யா!

தமிழக சூர்யாவுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கர்நாடக பா.ஜ.க எம்.பி சூர்யா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 7:17 AM GMT

பெங்களூர் தெற்கு தொகுதியின் இளம் பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா. கடந்த வருடம் 28 வயதில் பா.ஜ.க-வின் இளம் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டது மட்டுமின்றி, இந்தியாவிலேயே இரண்டாவது இளம் எம்.பி-யாகவும் அறியப்படுகிறார். தனது நேர்த்தியான பேச்சாற்றலாலும், தொகுதியில் சிறந்த மக்கள் பணியாலும் இந்தியா முழுவதும் இளம் தலைவராக தற்போது உருவெடுத்து வருகிறார்.

இவர், நேற்று தமிழக பா.ஜ.க செய்தித்தொடர்பாளரான SG சூர்யாவின் பிறந்தநாளுக்கு ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதில் சிறப்பு என்னவென்றால், அவர் வாழ்த்து தமிழில் அமைந்தது. "இந்த ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தர வாழ்த்துகிறேன்." என வாழ்த்துக்களை தெரிவித்தார் தேஜஸ்வி சூர்யா.

இதற்கு SG சூர்யா "Thanks da Machi" என பதிலளித்துள்ளார். இந்த இரண்டு ட்வீட்டுமே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேஜஸ்வி சூர்யா, SG சூர்யா இருவரும் கடந்த பல வருடங்களாக சிறந்த நண்பர்கள் என்பதும், ஒரே வருடத்தில் சட்டப்படிப்பை முடித்து, டிவி விவாதங்களில் பங்கேற்பவர்களாகவும், இருவரும் முறையே தமிழக பா.ஜ.க இளைஞரணி மற்றும் கர்நாடக பா.ஜ.க இளைஞரணியில் மாநில துணைத்தலைவர்களாக கடந்த காலத்தில் பொறுப்பு வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து SG சூர்யா 2016-ஆம் ஆண்டு ட்வீட் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார்.

இருவரும் ட்விட்டரில் பல முறை உரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News