Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்தி அன்று மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த சதி? - பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக புழல் ஜெயில் முற்றுகை போராட்டம்!!

விநாயகர் சதுர்த்தி அன்று மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த சதி? - பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக புழல் ஜெயில் முற்றுகை போராட்டம்!!

விநாயகர் சதுர்த்தி அன்று மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த சதி? - பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக புழல் ஜெயில் முற்றுகை போராட்டம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Aug 2019 9:21 AM GMT



புழல் மத்திய சிறையில் விசாரணை சிறை, தண்டனை சிறை மற்றும் மகளிர் சிறை உள்ளன. தண்டனை சிறையில் 750-க்கும் மேற்பட்ட கைதிகளும், விசாரணை சிறையில் 1,800-க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 100-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.


கடந்த, 2013-இல் இந்து முன்னணி பிரமுகர்கள் வேலுாரில் வெள்ளையப்பன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் பா.ஜ.க பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் பாடி ரமேஷ் ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள் 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் புழல் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.


அங்கு, வாரந்தோறும் செவ்வாய்கிழமை கைதிகளிடம் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குறைதீர் முகாம் நடத்துவது வழக்கம். அந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது.





இந்த முகாமில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதுபற்றி அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது குறித்து அவர்களிடம் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் விசாரிக்க சென்றார்.


அப்போது ஆத்திரம் அடைந்த பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவரும் சூப்பிரண்டு செந்தில்குமாரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனை பொருட்படுத்தாமல் செந்தில்குமார் அறையினுள் சென்றார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அவரை கீழே தள்ளி அடித்து உதைத்தனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடமிருந்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரை காப்பாற்றியுள்ளனர்.


பின்னர் இதுபற்றி புழல் போலீசில் செந்தில்குமார் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து முஸ்லிம் பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், தாக்க முயற்சித்தல் ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இந்த வழக்கில் 2 பேரையும் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-





ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சிறை கண்காணிப்பாளர் தலைமையில் கைதிகள் குறைகேட்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்ட குறைகேட்பு கூட்டங்களில் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவரும் கலந்துகொள்ளவில்லை. என்ன காரணம் என அறிந்துகொள்ள அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்குக்குச் சென்றேன்.


என்னைப் பார்த்ததும் அவர்கள் ஆபாசமாகப் பேசினார்கள். அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அறைக்குள் சென்று சோதனை நடத்தினேன். அவர்களோ, சத்தமாகக் கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி கத்திக் கொண்டே என்னைக் கீழே தள்ளிவிட்டுத் அடித்து உதைத்தனர்” என்று நடந்த சம்பவத்தை விவரித்தார.


குண்டு வைத்தல், கொலை செய்தல் போன்ற கடும் குற்றங்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் புழல் சிறையில் சுகபோகமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதேபோல அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அந்த அளவிற்கு அவர்களின் அராஜகமும், அட்டகாசமும் கொடிகட்டி பறந்துள்ளது.


செல்போன் பயன்படுத்துவது, ஆடம்பர கட்டில் மெத்தையில் தூங்குவது, பிரியாணி சமைத்து உண்பது போன்றவை சர்வ சாதாரணமாக அரங்கேறி வந்துள்ளன. கடந்த ஆண்டுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது.




https://www.youtube.com/watch?v=qGcu7AuvPbk



அந்த பரபரப்பு அடங்கிய பிறகு, முஸ்லிம் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் மீண்டும் தொடர்ந்து வந்துள்ளன. இதற்கு சிறையில் உள்ள பல அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.


இந்த நிலையில்தான் முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்பட அட்டூழியத்தில் ஈடுபடும் கைதிகளின் கொட்டத்தை அடக்கும் நடவடிக்கைகளை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தீவிரமாக மேற்கொண்டார்.


இது முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது வன்மத்தை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் செந்தில்குமார் தாக்கப்பட்டுள்ளார்.


ஏற்கனவே இந்து இயக்க தலைவர்கள் பலரை கொலை செய்த இந்த முஸ்லிம் பயங்கரவாதிகள், சிறைச்சாலையை ஒரு திருந்தும் இடமாக பயன்படுத்தவில்லை. பயங்கரவாதத்தை தொந்து தீவிரமாக செயல்படுத்தும் களமாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.


இதற்கு முக்கிய காரணம், முஸ்லிம் பயங்கரவாதிகளை சில முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் ஆதரிப்பதும், அவர்களுக்கு உதவி செய்வதும்தான்.


“இந்திய தேசிய லீக் கட்சி” என்ற முஸ்லிம் மதவெறி அமைப்பு, நேரடியாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அதரவு கரம் நீட்டி வருகிறது.


இந்திய தேசிய லீக் கட்சி, வருகிற 2-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று சிறையில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக “புழல் சிறை முற்றுகை போராட்டம்” அறிவித்துள்ளது.


விநாயகர் சதுர்த்தி அன்று மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் என்பது தெரிகிறது. அதற்கு புழல் சிறை முற்றுகை போராட்டம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு விநாயகர் சதுர்த்தி தினத்தை தேர்வு செய்ததும் அவர்களின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


பழல் சிறையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆதவாக இந்திய தேசிய லீக் கட்சி போராட்டம் அறிவித்துள்ளதன் மூலம், இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ததில், இந்திய தேசிய லீக் போன்ற முஸ்லிம் மதவெறி அமைப்புகள் பின்புலத்தில் இருந்து இயங்கினவா? என்ற சந்தேகம் வலுக்கிறது. எனவே இத்தகைய மதவெறி அமைப்புகள், கட்சிகளையும் விசாரணை வட்டத்திற்குள் கொண்டுவந்தால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளி வரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய லீக் கட்சி மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, தொடந்து மத வெறியை தூண்டி அமைதியை சீர்குலைத்து வரும் தேசிய லீக் கட்சியை தடை செய்ய வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பு.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News