Begin typing your search above and press return to search.
அந்த குறை என் குழந்தைக்கு வர கூடாது - நெகிழும் கார்த்தி!
அந்த குறை என் குழந்தைக்கு வர கூடாது - நெகிழும் கார்த்தி!

By :
கொரோனா அச்சுறுத்தலையடுத்து ஊரடங்கில் வீட்டில்லிருக்கும் கார்த்தி, தற்போது மக்கள் வீட்டிலிருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் "நான் சின்ன குழந்தையாக, சிறுவனாக இருந்தபோது அப்பா (நடிகர் சிவகுமார்) 'பிஸி'யாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அப்பாவை நிறைய 'மிஸ்' பண்ணியிருக்கிறேன். அந்த குறை, என் மகளுக்கு வரக்கூடாது என்பதற்காக, இந்த ஓய்வு நாட்களை பயன்படுத்திக் கொள்கிறேன். என் மகளுடன் நிறைய நேரத்தை செலவிடுகிறேன்.
தினமும் மூன்று வேளையும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். இப்போதைய சூழ்நிலையில், பெரும்பாலானவர்களுக்கு கையில் காசு இருக்கும். ஆனால் வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், வீட்டிலேயே இருப்போம்... பாதுகாப்பாக இருப்போம்" என கூறியுள்ளார்.
Next Story