திருமாவளவன் கும்பல்களின் நாடக காதலை தோலுரித்துக் காட்டும் 'திரௌபதி' திரைப்படம், நாளை வெளியீடு!
திருமாவளவன் கும்பல்களின் நாடக காதலை தோலுரித்துக் காட்டும் 'திரௌபதி' திரைப்படம், நாளை வெளியீடு!

திருமாவளவன் கும்பல்கள் நடத்தும் நாடக காதலை தோலுரித்துக் காட்டும் வகையில் எடுக்கப்பட்ட "திரௌபதி" திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது. மூன்று நாட்களில் 40 லட்சம் பேர் அதனை பார்த்து உள்ளனர். சிறுமுதலீட்டு படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது இதுவே முதல் முறை. இந்த நிலையில் திரௌபதி திரைப்படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இதனை மோப்பம் பிடித்த திருமாவளவன் கும்பல், தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி, இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என்று தடைகளை ஏற்படுத்தினர். குறிப்பாக மும்பையில் உள்ள தணிக்கை பிரிவு தலைமை அதிகாரிக்கு புகார்கள் அனுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திரௌபதி திரைப்படம் மறு தணிக்கை குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. படத்தைப் பார்த்த மறு தணிக்கை குழுவினர், திரௌபதி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
இந்தப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை திரைப் படத்தை இயக்கிய மோகன்.ஜி இயக்கியுள்ளார். நடிகர் அஜித்தின் மச்சான் (ஷாலினியின் சகோதரர்) ரிஷி ரிச்சர்டு கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கருணாஸ், நிஷாந்த், சௌந்தர்யா, சேஷு, ஆறுபாலா, லேனா உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நாராயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீபின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை எஸ்.தேவராஜனும், நடனத்தை ஜானியும், சண்டைப் பயிற்சியை மகேஷும் செய்துள்ளனர். பாடல்களை பட்டினத்தார், மோகன்.ஜி, மணிகண்டன் பிரியா ஆகியோர் எழுதியுள்ளனர். வேல்முருகன், அபை ஜோத்புர்கர் ஆகியோர் பாடி உள்ளனர்.
திரௌபதி திரைப்படத்தை ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி திரௌபதி படத்தின் ட்ரெய்லர் வெளியான உடனேயே, ரசிகர்கள் மத்தியில் பேராதரவு பெருகியது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் திரௌபதி திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பல இடங்களில் திருமணம், காதணி போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் திரௌபதி படத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து சுவர் எழுத்து, பெயிண்டிங் போன்ற விளம்பரங்களையும் திரௌபதி படத்திற்காக செய்துள்ளனர்.
திரௌபதி திரைப்படம் நாளை (28-ஆம் தேதி) திரைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.