சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி - யார் இந்த யு.யு.லலித்?

சுப்ரீம் கோர்ட் தலைமை தலைமை நீதிபதி என்.வி. ரமணா 26 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். மூத்த நீதிபதி சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி - யார் இந்த யு.யு.லலித்? அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பதவி ஏற்றவர் என்.வி.ரணா.இவர் வரும் 26 ஆம் தேதி பணி நிறைவு செய்கிறார்.
இந்த நிலையில் இவர் பணி ஓய்வு பெறுவதால் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இதற்கான கடிதத்தை அவர் மத்திய அரசிடம் வழங்கியுள்ளார்.
புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிற யு.யு.லலித் 27 தேதி பதவி ஏற்பார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கிற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ஆனால் இவர் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே பதவியில் இருப்பார் நவம்பர் 8ஆம் தேதி ஓய்வு பெறுவார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நியமிக்கப்பட உள்ள யு.யு.லலித் 1957 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தவர். 1985ஆம் ஆண்டு வரை மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார் 1906ஆம் ஆண்டு டெல்லியில் வக்கீல் தொழிலை தொடங்கினார். 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல் அங்கீகாரம் பெற்றார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐயின் சிறப்பு வக்கீலாக நியமிக்கப்படு பணியாற்றினார்.
சுப்ரீம் கோர்ட்டு சட்ட உதவிக் குழுவின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
'முத்தலாக்' சொல்லி முஸ்லிம்களை விவாகரத்து செய்யும் முறை செல்லாது என தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வில் யு.யு.லலித்தும் அங்கம் வகித்திருந்தார்.
இவரது தலைமையிலான அமர்வு தான் கேரளாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசுவாமி கோவில் நிர்வாக உரிமை, திருவிதாங்கூர் முன்னாள் அரச குடும்பத்திற்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.
குழந்தைகளின் உடலை தவறான நோக்கத்துடன் தொடுவதும்,உடல் ரீதியான எந்த ஒரு செயலில் ஈடுபடுவதும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7 ன் கீழ் பாலியல் வன்கொடுமை என தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு நீதிபதி யு.யு. லலித் அமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.