Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் இருந்து சிறப்பு விமானத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பும் பிரான்ஸ் மக்கள்!

புதுச்சேரியில் இருந்து சிறப்பு விமானத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பும் பிரான்ஸ் மக்கள்!

புதுச்சேரியில் இருந்து சிறப்பு விமானத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பும் பிரான்ஸ் மக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2020 12:54 PM GMT

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் விடுமுறையிலும், உறவினர்களை பார்க்கவும், சுற்றுலாவுக்காகவும் கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி வந்தனர். இவர்கள் தங்களது நாட்டிற்கு திரும்புகிற நேரத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செல்ல முடியவில்லை.

இதனால் புதுச்சேரியில் முடங்கி இருந்த அவர்கள், தங்களது பிரச்சினை குறித்து தூதரகத்தில் தெரிவித்தனர். தற்போது புதுச்சேரியிலும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் இதையடுத்து 160 பிரான்ஸ் நாட்டினரை, சொந்த நாட்டிற்கு அழைத்து வர பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து 160 பேரும் இன்று பிரெஞ்சு தூதரகத்திற்கு வந்தனர்.


அவர்களது ஆவணங்கள் சரி செய்த பின்பு, அவர்களுக்கு ஏற்பாடு செய்யபட்ட பேருந்தில் ஏறி சென்னை விமான நிலையம் சென்றனர். சென்னை விமான நிலையத்தில் பிரான்ஸ் அரசாங்கத்தின் சிறப்பு விமானம் மூலம் இன்று மாலை 160 பேரும், பிரான்ஸ் அழைத்து செல்லபடுகிறார்கள்.

Next Story