Kathir News
Begin typing your search above and press return to search.

“எஸ்.டி.பி.ஐ கட்சியினர், எனது மகளை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்றிவிட்டனர்” – சபரிமலைக்கு அனுப்பப்பட்ட பிந்து புகார்!!

“எஸ்.டி.பி.ஐ கட்சியினர், எனது மகளை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்றிவிட்டனர்” – சபரிமலைக்கு அனுப்பப்பட்ட பிந்து புகார்!!

“எஸ்.டி.பி.ஐ கட்சியினர், எனது மகளை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்றிவிட்டனர்” – சபரிமலைக்கு அனுப்பப்பட்ட பிந்து புகார்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Aug 2019 11:48 AM GMT


சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு, கேரளாவை சேர்ந்த 44 வயது கனகதுர்கா மற்றும் 42 வயது பிந்து ஆகியோரை பிணராயிவிஜயனின் கம்யூனிஸ்ட் அரசு, வேண்மென்றே அடம்பிடித்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் போலீஸ் படையுடன்அழைத்துச் சென்றது.
இவர்கள் 2 பேரும் ஏற்கனவே சபரிமலைக்கு செல்லமுயன்றபோது ஐயப்ப பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள். 2-வது முறையாக போலீஸ்பாதுகாப்புடன் அதிகாலை நேரத்தில் போலீஸ் யூனிபாமில் கொண்டு சென்று சபரிமலை புனிதத்தை கெடுத்தார் கிறிஸ்தவ மதவெறி பிடித்த பிணராயி விஜயன்.


சபரிமலைக்கு பிணராயி விஜயனால் வலுக்கட்டாயமாக சதிதிட்டத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட பிந்து, தன்னை முஸ்லிமாக மதம் மாறும்படி மிரட்டி வருவதாக புகார் அளித்து உள்ளார்.


இதுதொடர்பாக கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு அனுப்பி உள்ள புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது;-


எனது கணவர் கமால், முஸ்லிம் மதவெறி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியுடள் சேர்ந்து எனது மகள் பூமியை முஸ்லிமாக மதம் மாற்றி விட்டார். என்னையும், எனது மகளையும் முஸ்லிமாக மதம் மாற்றுவதற்காக எனது கணவர் கமாலுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஒரு பெரும் தொகையை கொடுத்து உள்ளனர்.


பள்ளி விடுமுறையின்போது எனது மகள் பூமியை கணவர் கமால் அழைத்துச் சென்றார். பின்னர் அவளை திருப்பி அனுப்பவே இல்லை. எனக்கு தெரியாமலேயே அவள் படித்த பள்ளிக்கு சென்று அவளின் பள்ளி மாற்று சான்றிதழை பெற்று, அவளை ஒரு முஸ்லிம் மதவெறி பள்ளியில் சேர்த்துள்ளார்.


இப்போது அவளுக்கு பர்தா அணிவித்து உள்ளனர். எனது மகள் பூமியை பார்ப்பதற்கே என்னை அனுமதிக்கவில்லை.


நான் எனது மகளை பார்க்க முயன்றதால் எனது கணவர் கமால், என்னை அடித்து சித்திரவதை செய்கிறார். அவர் மட்டுமல்ல, முஸ்லிம் மதவெறி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.


எனவே முதல்வர் பிணராயி விஜயன் இதில் தலையிட்டு எனது மகளை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News